twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காளி போஸ்டர் சர்ச்சை..நான் பதிவிட்டது என்னுடைய படமல்ல..லீனா மணிமேகலை ட்வீட்!

    |

    சென்னை : காளி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய லீனா மணிமேகலை, தனது ட்விட்டர் பக்கத்தில், இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது என்று ஒரு காட்டமான பதிவை பகிர்ந்துள்ளார்.

    Recommended Video

    கையில் சிகரெட்டுடன் காளி! சர்ச்சையில் சிக்கிய Leena Manimegalai என்ன நடந்தது?

    மதுரையைச் சேர்ந்த கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் திறமைகளைக் கொண்டவர் லீனா மணிமேகலை.

    பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். பல சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

     காளி பிரச்சனை ஒருபுறம்.. சுசி கணேசன் மறுபுறம்.. லீனா மணிமேகலைக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! காளி பிரச்சனை ஒருபுறம்.. சுசி கணேசன் மறுபுறம்.. லீனா மணிமேகலைக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

    சர்ச்சை போஸ்டர்

    சர்ச்சை போஸ்டர்

    ஜூலை2ந் தேதி கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'ரிதம்ஸ் ஆஃப் கனடா' என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை இயக்கிய காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து, காளி போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் லீனா மணிமேகலை. அந்த போஸ்டர் தற்போது பெரும் புயலை கிளப்பி வருகிறது.

    மதத்தை புண்படுத்திவிட்டார்

    மதத்தை புண்படுத்திவிட்டார்

    நாடக பாணியிலான உருவாகி உள்ள அந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் LGBTQ கொடியும், மற்றொரு கையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், மதத்தை புண்படுத்திவிட்டதாக கூறி லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் உள்ளிட்ட பகுதிகளில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போஸ்டரை நீக்கியது

    போஸ்டரை நீக்கியது

    இதற்கு லீனா மணிமேகலை, கனடாவின் டொராண்டோவின் தெருக்களில் ஒரு பெண் உலா வருவதைப் பற்றிய ஆவணப்படம் தான் இது என்று விளக்கம் அளித்திருந்தார். ஆனால், பிரச்சனை பூதாகரமாகியதை அடுத்து, கனடாவின் ஆகா கான் அருங்காட்சியகம் ஆவணப்படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அகற்றி, வருத்தமும் தெரிவித்திருந்தது.

    இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது

    இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது

    இந்நிலையில், லீனா, தனது ட்விட்டர் பக்கத்தில், சிவன் மற்றும் பார்வதி வேடமிட்ட நாடக கலைஞர்கள் புகைப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, கிராமப்புற நாடகக் கலைஞர்கள் நிகழ்ச்சியை எப்படி நடத்துகிறார்கள் என்பது பற்றி பா.ஜ.கவின் ஊதியம் பெறும் ட்ரோல் ஆர்மிக்கு தெரியாது. இது என்னுடைய படம் அல்ல. அன்றாட கிராமப்புற இந்தியாவிலிருந்து வரும் இது போன்ற கலைகளை, சங்பரிவாரங்கள் தங்கள் இடைவிடாத வெறுப்பு, மத வெறியால் அழிக்க நினைக்கிறார்கள். இந்துத்துவா ஒருபோதும் இந்தியாவாக முடியாது என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Kaali poster controversy : Hindutva can never become India, tweets filmmaker Leena Manimekalai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X