லீனா மணிமேகலையின் 'காளி’ போஸ்டர் சர்ச்சை.. கனடாவிலும் எதிரொலித்தது !

சென்னை : மத உணர்வை புண்படுத்தும் வகையில் வெளியாகி உள்ள காளி ஆவணப்படத்தை திரும்பப்பெறுமாறு கனடா இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

Recommended Video

Leena Manimegalai-யின் ஆவண படத்தால் பாஜக-வினர் கொதிப்பு, “காளி” *TamilNadu | Oneindia Tamil

காளி படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டரால் பெரும் சலசலப்பு மற்றும் லீனா மணிமேகலையை கைது செய்யும் கோரிக்கைகள் சமூகவலைத்தளத்தில் வலுத்து வருகின்றன.

ஜூலை 2ஆம் தேதி லீனாவால் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பான தமது புகாரில், ஆவணப்படத்தின் ஆட்சேபனைக்குரிய புகைப்படம் மற்றும் கிளிப்பிங்கை தடை செய்யுமாறு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கோரியுள்ளார்.

லீனா மணிமேகலை

லீனா மணிமேகலை

கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் திறமைகளைக் கொண்டவர் லீனா மணிமேகலை. இவர் பாலியல், சமூக ஒடுக்குமுறை, ஈழப்போராட்டங்கள் என பல பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். பல சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்

சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்

ஜூலை2ந் தேதி கனடா நாட்டின் டொரண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'ரிதம்ஸ் ஆஃப் கனடா' என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை இயக்கிய காளி திரைப்படம் திரையிடப்பட்டது. இதையடுத்து, காளி போஸ்டரை இணையத்தில் பகிர்ந்து இருந்தார் லீனா மணிமேகலை. அந்த போஸ்டர் தற்போது பெரும் புயலை கிளப்பி வருகிறது.

இந்து மதத்தை அவமதிக்கும் செயல்

இந்து மதத்தை அவமதிக்கும் செயல்

நாடக பாணியில் உருவாகி உள்ள அந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் காளிதேவி ஒரு கையில் ஓரின சேர்க்கை கொடியும், மற்றொரு கையில் சிகரெட் புகைப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கனடாவில் எதிரொலித்த சர்ச்சை

கனடாவில் எதிரொலித்த சர்ச்சை

இந்நிலையில், இந்து மத தலைவரிடமிருந்து புகார் வந்ததை அடுத்து காளி ஆவணப்படத்தை திரும்பப்பெற வேண்டு என்று கனடாவுக்கான இந்திய தூதரகம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இழப்பதற்கு ஒன்றுமில்லை

இழப்பதற்கு ஒன்றுமில்லை

காளி போஸ்டர் குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து நேற்று விளக்கம் அளித்த லீனா மணிமேகலை, எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருக்க விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என்று பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X