'பூ’ ராமு இறுதி ஊர்வலத்தில் பறை அடித்த பிரபல நடிகர்.. அந்த அளவுக்கு அவர் மேல பாசம் இருக்கு!

சென்னை: மறைந்த நடிகர் 'பூ' ராமுவின் இறுதி ஊர்வலத்தில் பிரபல நடிகர் ஒருவர் பறை வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Poo Ramu Passed Away | திரையுலகினர் இரங்கல் *Kollywood | Filmibeat Tamil

சிறு வயது முதலே போராட்டக் குணம் கொண்ட 'பூ' ராமு கம்யூனிச சிந்தனைகளால் பலருக்கும் தோழராக அறியப்பட்டார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது இரங்கல் ட்வீட்டில் கூட போய் வாருங்கள் தோழர் என்றே குறிப்பிட்டு இருந்தார்.

பூ ராமு காலமானார்

பூ ராமு காலமானார்

சிறந்த எழுத்தாளராக இலக்கிய உலகிற்கு தனது இணையற்ற சேவைகளை புரிந்து வந்தார். இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான 'பூ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக 'பூ' ராமு என திரையுலகினரால் கொண்டாடப்பட்டார். தொடர்ந்து நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று மற்றும் கர்ணன் படங்களில் நடித்த 'பூ' ராமு மாரடைப்பு காரணமாக திங்கட்கிழமை மாலை 7 மணியளவில் காலமானார்.

மரணத்திற்கான காரணம்

மரணத்திற்கான காரணம்

60 வயதை கடந்த 'பூ' ராமுவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கே அவருக்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததும் உறவினர்கள் மற்றும் சினிமா நண்பர்கள் உடைந்தே போய் விட்டனர். சமீப காலமாக மாரடைப்பு காரணமாக ஏராளமான நடிகர்கள் உயிரிழந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்சேதுபதி இரங்கல்

விஜய்சேதுபதி இரங்கல்

#RIPPooRamu எனும் ஹாஷ்டேக்கை போட்டு பூ ராமுவின் மரண செய்தியை பகிர்ந்து தனது ஆழ்ந்த இரங்கலை நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்து இருந்தார். கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜ் "போய் வாருங்கள் தோழர்" என உருக்கமாக ட்வீட் போட்டு தனது மனவேதனை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், நடிகர் காளி வெங்கட் செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பறை அடித்த காளி வெங்கட்

பறை அடித்த காளி வெங்கட்

ஊரப்பாக்கம், பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு 'பூ' ராமுவின் உடல் கொண்டு செல்லப்பட்டு செவ்வாய்க்கிழமை மதியம் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் பறை அடித்து இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற வீடியோ ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தி உள்ளது. முன்னதாக 'பூ' ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற விஷயத்தையே இவர் தான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X