கொல காண்டு vs கொல கோபம்: காளிக்கு சவால் விடும் தூக்குதுரை?
சென்னை: பேட்ட ட்ரெய்லரில் ரஜினி பேசியதற்கு பதில் அளிப்பது போன்று உள்ளது விஸ்வாசம் ட்ரெய்லரில் அஜித் பேசியுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியான 12 நிமிடத்தில் அதை 10 லட்சம் பேர் பார்த்துவிட்டனர்.
ட்ரெய்லரில் வந்துள்ள வசனங்கள் பேட்ட காளிக்கு பதில் அளிப்பது போன்று உள்ளது.

அஜித்
கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விட மாட்டேன் என்று பேட்ட ட்ரெய்லரில் ரஜினி பேசியிருந்தார். உங்க மேல கொல கோபம் வரணும், ஆனால் எனக்கு உங்கள புடிச்சிருக்கு சார். அதனால லாங் லிவ், ஹேப்பி லைஃபு, மிரட்டு என்று அஜித் விஸ்வாசம் ட்ரெய்லரில் ரஜினிக்கு பதில் அளித்தது போன்று இருப்பதாக ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

தூக்குதுரை
எவனுக்காவது பொண்டாட்டி, குழந்தை குட்டிகன்னு சென்டிமென்ட், கின்டிமென்ட் இருந்தால் அப்படியே ஓடிப்போயிடு என்று ரஜினி பன்ச் வசனம் பேசியிருந்தார். இந்நிலையில் விஸ்வாசம் ட்ரெய்லரில் அதற்கு பதில் அளிப்பது போன்று பேரு தூக்குதுரை, தேனி மாவட்டம், ஊர் கொடுவிலார்பட்டி, பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா என்கிறார் அஜித்.

ரூபன்
விஸ்வாசம் படத்தின் எடிட்டர் ரூபன் வச்சு செஞ்சிட்டார் என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாட்டுக்கு பாட்டில் பதில் சொன்ன காலம் மலையேறி ட்ரெய்லருக்கு ட்ரெய்லர் மூலம் பதில் கொடுக்கிறார்கள்.

காரணம்
பேட்ட ட்ரெய்லருக்கு பதில் அளிப்பது போன்று வந்துள்ளது விஸ்வாசம் ட்ரெய்லர். அதனால் இரண்டையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள். சமூக வலைதளங்கள் பக்கம் போனாலே பேட்ட, விஸ்வாசம் ஒப்பீடு தான் நடந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











