Kaalidas 2 Day 1 Box Office - காளிதாஸ் 2 முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் டல்.. பாவம் பரத்

சென்னை: தமிழ் சினிமாவில் திறமையுள்ள நடிகர்களில் ஒருவர் பரத். அவர் அறிமுகமான பாய்ஸ் படமே சூப்பராகத்தான் இருந்தது. அதிலும் இவரது நடிப்பும், நடனமும் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து அவர் நடித்த காதல், எம் மகன் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டடித்தன. திடீரென அவருக்கு மார்க்கெட் சரிந்தது. இருப்பினும் விடாப்பிடியாக நடித்து எப்படியாவது இழந்த இடத்தை பிடித்துவிட வேண்டும் என உழைக்கிறார். இப்போது அவர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் காளிதாஸ் 2 படத்தில் நடித்திருக்கிறார். நேற்று படம் ரிலீஸானது.

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் பரத். அந்தப் படத்தில் அவரது திறமை அனைவரையும் ஈர்த்துவிட்டது. அந்தப் படம் தோல்வியடைந்ததோடு மட்டுமின்றி கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. அதேசமயம் பரத்துக்கு நல்ல எதிர்காலத்துக்கான கதவு திறந்தது. அதற்கு பிறகு அவர் நடித்த செல்லமே, காதல், எம். மகன், பட்டியல், வெயில், பிப்ரவரி 14 உள்ளிட்ட படங்கள் எல்லாம் மெகா ஹிட்டாகின. இதன் காரணமாக கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு மார்க்கெட் சரிய தொடங்கிவிட்டது.

Kaalidas 2 Box Office Day 1 Bharath s Film Opens Low at 30 Lakhs
Photo Credit:

நல்ல நடிகர்: மார்க்கெட் சரிந்தாலும் தன்னம்பிக்கையை அவர் இழக்கவில்லை. இடை இடையே 555 மாதிரியான நல்ல படங்களிலும் நடிக்கத்தான் செய்தார். ஆனாலும் அவருக்கு பெரிய வெற்றி எதுவும் கடந்த பல வருடங்களாகவே கிடைக்காமல் இருக்கிறது. சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து அசத்தியவர் அவர். நல்ல திறமையிருந்தும் இப்படி காணாமல் போய்விட்டாரே என்று அவரை பற்றிய உரையாடலில் திரைத்துறையினர் தவறாமல் சொல்லிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காளிதாஸ் 2: சூழல் இப்படி இருக்க ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் காளிதாஸ் படத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடித்தார். அந்தப் படம் சூப்பர் ரெஸ்பான்ஸை கிடைத்தது. பரத்துக்கு நீண்ட வருடங்கள் கழித்து ஒரு வெளிச்சம் கிடைத்தது. இப்போது மீண்டும் அந்த இயக்குநரின் இயக்கத்தில் காளிதாஸ் 2 படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் பாவனி ஸ்ரீ, அஜய் கார்த்தி, அபர்ணதி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். முதல் பாகம் போல் இதுவும் வரவேற்பு பெறுமா என்ற ஹைப் ஓரளவுக்கு இருந்தது.

Also Read
Leader Day 1 Box Office - லெஜெண்ட் சரவணனின் லீடர் முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர்
Leader Day 1 Box Office - லெஜெண்ட் சரவணனின் லீடர் முதல் நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் சூப்பர்

எப்படி இருக்கு படம்?: படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்பது ரசிகர்களின் கருத்து. முதல் பாகத்தில் பல விஷயங்கள் நம்மோடு கனெக்ட் ஆனது. ஆனால் இதில் அப்படி எதுவும் இல்லை என நொந்துகொண்டார்கள் ரசிகர்கள். அதேசமயம் பரத்தின் நடிப்பு வழக்கம்போல் அருமையாக இருந்தது என புகழவும் அவர்கள் தவறவில்லை. ஆகமொத்தம் இந்தப் படம் சுமாருக்கும் கீழே என்ற ரிசல்ட்டைத்தான் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் முதல் நாளில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் நாளான நேற்று வெறும் 30 லட்சம் ரூபாய் மட்டும்தான் வசூலித்திருக்கிறதாம். இது ரொம்பவே குறைவான வசூல் ஆகும். முதல் காட்சிக்கு பிறகு இந்தப் படம் சுமாருக்கும் கீழே என்றும்; லெஜெண்ட் சரவணனின் லீடர் படத்துக்கு பாசிட்டிவ் டாக் வந்ததால் கூட்டமெல்லாம் அங்கு செல்ல தொடங்கிவிட்டார்கள் என்பது பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்திலிருந்து வரும் தகவல் ஆகும்.

More from Filmibeat

Read more about: bharath பரத்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X