Kaantha Box Office: துல்கர் சல்மானின் ‘காந்தா’.. முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்?.. இதோ கணிப்பு!
சென்னை: துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானின் வேஃபேரர் மூவிஸ் மற்றும் ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா இணைந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளது.
இரண்டு ஹீரோக்களே இணைந்து தயாரித்துள்ள நிலையில், லாபத்தில் தான் பங்கெடுத்து கொள்வார்கள் என்றும் சம்பளம் பட்ஜெட்டில் சேராது என்றும் தெளிவாக தெரிகிறது.

காந்தா படத்தின் மொத்த பட்ஜெட்டே 30 முதல் 40 கோடி ரூபாய் தான் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கண்டிப்பாக துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய லாபத்தையே இந்த காந்தா கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கோடிக்கு ஆசைப்படல: எப்போதுமே 1000 கோடி பாக்ஸ் ஆபீஸுக்கு ஆசைப்பட்டு படங்களை தான் உருவாக்குவதில்லை என்றும் விமர்சகர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் பாராட்டும் வகையிலான நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே தனது நோக்கம். நிச்சயம் நல்ல படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது தெரியும் என்றும் சமீபத்தில், அளித்த பேட்டியில் துல்கர் சல்மான் கூறினார்.
அப்பாவை போல: மம்மூட்டி கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி காதல் தி கோர் போன்ற படங்களை வெறும் 20 கோடிக்குள் எடுத்து மிகப்பெரிய லாபத்தை மம்மூட்டி பார்த்து வருகிறார். அப்பாவை போல மகன் துல்கர் சல்மானும் சொந்தமாக வேஃபேரர் மூவிஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லோகா திரைப்படம் 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. காந்தா திரைப்படமும் 30 முதல் 40 கோடி பட்ஜெட் என்றே கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபீஸ் கணிப்பு: வரும் நவம்பர் 14ம் தேதி காந்தா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை அதிகம் டார்கெட் செய்தே இந்த படம் வெளியாகிறது. ஆனாலும், கேரளாவில் துல்கர் சல்மானுக்கு உள்ள ரசிகர்கள் காரணமாக அங்கேயும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வசூல் அதிகப்படியாக 10 கோடி ரூபாய் உலகளவில் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்கான பாசிட்டிவ் விமர்சனங்கள் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியில் போடப்பட்ட நிலையில், குவிந்து வரும் நிலையில், டிக்கெட் புக்கிங் சூடு பிடித்திருக்கிறது. லக்கி பாஸ்கர் போலவே இந்த படமும் 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











