Kaantha Day 6 Box Office: ’காந்தா’ கல்லா கட்டியதா?.. கடையை சாத்தியதா?.. 6 நாள் வசூல் எத்தனை கோடி?

சென்னை: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி மற்றும் ராணா டகுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான காந்தா திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபீஸில் படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் கடந்த ஆண்டு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்ற துல்கர் சல்மான் லோகா திரைப்படத்தை தயாரித்து இந்த ஆண்டு 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றார். அவர் நடிப்பில் வெளியான காந்தா திரைப்படம் லோகாவை முந்துமா? என எதிர்பார்த்த நிலையில், லக்கி பாஸ்கர் வசூலில் பாதி கூட வசூல் செய்யுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

Kaantha Day 6 Box Office Collection Reports in Tamil Dulquer Salman faces huge box office drop

இதுவரை இந்தியளவில் 6 நாட்களில் காந்தா திரைப்படம் வசூல் செய்துள்ள தொகை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

தயாரிப்பாளரே தோல்விக்கு காரணம்?: காந்தா படத்தை துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி என 2 நடிகர்கள் தயாரித்து வெளியிட்டனர். முதல் பாதியை துல்கர் சல்மான் தனது நடிப்பால் தாங்கிப் பிடித்த அளவுக்கு 2வது பாதியை இன்னொரு தயாரிப்பாளரான ராணா டகுபதி தூக்கிப் பிடிக்காமல் பொத்தென போட்ட நிலையில், காந்தா காலாவதியாகி விட்டது.

6 நாள் வசூல்: சுமார் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம் 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. ஆனால், துல்கர் சல்மான் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்த காந்தா திரைப்படம் ஆர்ட் படமாக அட்டகாசமாக இருந்தாலும், மக்களை கவரவில்லை. அதன் காரணமாக 6 நாட்களில் இதுவரை இந்தியளவில் வெறும் 19.10 கோடி மட்டுமே காந்தா திரைப்படம் வசூல் அள்ளியாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது. துல்கர் சல்மான் இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் தோல்விக் காரணமாக ரொம்பவே அப்செட் ஆகிவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

2வது வாரம் பிக்கப் ஆகுமா?: இந்த வாரம் கவின் நடித்த தீயவர் குலைகள் நடுங்க மற்றும் கவினின் மாஸ்க் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. காந்தா திரைப்படம் தெலுங்கில் கூட ஓடாத நிலையில், தமிழில் மட்டுமே சில கோடிகளை அள்ளி வருகிறது. இந்நிலையில், இந்த வார இறுதி நாட்களில் வசூல் அதிகரித்தால் தான் 30 கோடி அளவுக்கு இந்தியாவில் வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X