Kaantha First Review: காந்தா படம் எப்படி இருக்கு? இதோ முதல் விமர்சனம்.. உச்சிகுளிர பாராட்டிய பிரபலம்!
சென்னை: நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படம் காந்தா. இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்க, துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி இணைந்து தயாரித்துள்ளார்கள். படத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி மற்றும் பாக்யஸ்ரீ போர்ஷே என பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படம் எப்படி உள்ளது என்று படம் பார்த்த பிரபலங்கள் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படம் மறைந்த திரைக்கலைஞர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் கதை என்று சிலர் பதிவிட்டு வருகிறார்கள். படக்குழுவினர் இந்த படத்தின் கதைக்களம் என்பது 1950 கால கட்டங்களில் நடைபெறும் நடிகர்களுக்கு இடையிலான ஈகோ பிரச்னையை மையமாக கொண்டது என்று தெரிவித்து வருகிறார்கள். படத்தின் பெயர் தொடங்கி, போஸ்டர், டீசர், டிரைலர் என எல்லாம் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் வெளியாகி பாராட்டுக்களை குவிக்கும் படமாக மாறும் என்ற நம்பிக்கை படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி இருக்கும்போது, படத்தின் புரோமோசன் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் பேசுகையில் படத்தில் நடித்துள்ள நடிகர் சமுத்திரக்கனி தான் படம் பார்த்து விட்டதாகவும், படம் எப்படி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவர் பேசுகையில், " இன்றுதான் நான் படம் பார்த்தேன். மிகவும் நிறைவாகவும் கனமாகவும் உள்ளது. உங்களை ( துல்கர் சல்மான்) பார்த்ததும் கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. அந்த அளவுக்கு நன்றாக நடித்திருந்தீர்கள். கதையை உள் வாங்கி நடித்திருந்தீர்கள். இந்த படத்தின் படப்பிடிப்புகளின் போது எப்போதும் நான் முதல் டேக்கில் நான் நடிக்க மாட்டேன். மாறாக துல்கர் சல்மான் நடிப்பதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன்.
அப்போது இயக்குநர் செல்வமணி கூறுவார், நீங்கள் துல்கர் சல்மானையே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பார். மிகவும் அருகில் இருந்தால் அவரைத்தான் பார்க்க வேண்டும். அவர் நடிப்பதை ரசித்துக் கொண்டே இருப்பேன். மிகவும் அருகில் உங்களது நவரசத்தையும் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் திறமைக்கும், உழைப்புக்கும், மற்றவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்புக்கும் நீங்கள் இன்னும் பல உயரங்களுக்கு செல்வீர்கள் என்று சொன்னார். அதேபோல் அவர் பேசி முடித்த பின்னர் கீழே வந்ததும், துல்கர் சல்மானை ஆத்மார்த்தமாக கட்டிப் பிடித்துக் கொண்டார்.

இதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு பிரஸ் மீட்டில், நடிகர் ராணா டகுபதி பேசும்போது அவரது தந்தை படம் பார்த்துவிட்டு, துல்கர் சல்மான் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார். நான் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தேன் என்று தெரிவித்ததாக கூறினார். இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் படத்தைப் பாராட்டி வருவதால், படத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











