Kaantha Public Review: கலையை ரசிக்கிறவங்களுக்கு படம் புடிக்கும்.. ஆர்ட் படம்.. காந்தா பப்ளிக் விமர்சனம்!

சென்னை: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரகனி மற்றும் பாக்யஸ்ரீ உள்ளிட்ட 4 நடிகர்களும் போட்டிப் போட்டு தேசிய விருது எனக்குத்தான் தரணும் என நடித்துள்ள உலகத் தரமான கலைப்படைப்பாக வெளியாகி இருக்கிறது இந்த காந்தா திரைப்படம் என நேற்று நள்ளிரவு 10.30 மணிக்கு போடப்பட்ட ப்ரீமியர் ஷோவை பார்த்துவிட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் பப்ளிக் விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் இதே போலவே கடைசி நேரத்தில் நள்ளிரவு காட்சி திரையிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரஸ் ஷோ ஒரு நாள் முன்பே போடப்பட்ட நிலையில், அதன் மூலம் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக நேற்று இரவு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ப்ரீமியர் ஷோ போடப்பட்டது.

Kaantha Public Review in Tamil Fans praising Dulquer Salman s Classic Acting

சென்னையில், பல தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவே ஓடிய நிலையில், பாக்ஸ் ஆபீஸிலும் படம் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனரல் ஆடியன்ஸுக்கு இந்த படம் பிடிக்குமா? பிடிக்காதா? என படம் பார்த்த ரசிகர்கள் எனன் சொல்றாங்கன்னு இங்கே பார்க்கலாம் வாங்க..

கலையை ரசிச்சா புடிக்கும்: படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தவர்களிடம் யூடியூப் சேனல்கள் எழுப்பிய மிகவும் முக்கியமான கேள்வியே ஜெனரல் ஆடியன்ஸுக்கு இந்த படம் பிடிக்குமா? என்பதுதான். ஆனால், கலையை ரசிக்கிறவங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் என்று ஏகப்பட்ட ஜெனரல் ஆடியன்ஸே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளனர். 1950 காலக்கட்டத்திற்கே நம்மை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் அழைத்துச் சென்றுவிட்டார் என்றும் துல்கர் சல்மான் நடிப்புக்காகவே இந்த படத்தை தாராளமாக குடும்பத்துடன் தியேட்டரில் பார்க்கலாம் என ஏகப்பட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை: இளைஞர்கள் இந்த படத்திலும் காந்தாரா போல கத்திக்கொண்டு ஹீரோ ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பார் என சிலர் நினைத்து வந்த நிலையில், அவர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் என்றும் இடைவேளை காட்சியே படம் முடிந்தது போல இருந்ததாகவும், இடைவேளைக்குப் பிறகு இன்னொரு பெரிய படம் பார்த்த அனுபவத்தை கொடுத்துவிட்டது என்றும் குறைகளையும் கூறியுள்ளனர்.

துல்கர் சல்மான் தூள் கிளப்பிட்டார்: சினிமாவின் சூப்பர் ஸ்டார் எப்படி இருப்பார் என்றும் அவருக்கும் இயக்குநருக்கும் ஈகோ கிளாஷ் ஏற்பட்டால் படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும், ஒரு மனுஷன் கோபத்தினால் அழிந்தால் என்ன ஆகும் என்பதை எல்லாம் படம் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. பல பிரபலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போக இதுபோன்ற விஷயங்கள் தான் காரணம் என்பதையும் உணர்த்துகிறது. துல்கர் சல்மான் தனது நடிப்பால் தூள் கிளப்பியுள்ளார். கொடுக்கிற காசுக்கு அவரோட நடிப்பே வொர்த் தான். ராணா டகுபதி, சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் எல்லாம் வெறித்தனமாக நடித்துள்ளனர். நல்லதொரு ஆர்ட் படத்தை தமிழில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X