Kaantha X Review: நடிப்புச் சக்கரவர்த்தி துல்கர் சல்மான்.. வேர்ல்ட் கிளாஸ். காந்தா ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: கடந்த ஆண்டு லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் மிகப்பெரிய சம்பவத்தை செய்த துல்கர் சல்மான் இந்த ஆண்டு ஏற்கனவே தயாரிப்பாளராக கல்யாணி பிரியதர்ஷனின் லோகா படத்தின் மூலம் 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்று சாதித்துக் காட்டினார். லோகா படத்தில் கேமியோ ரோலில் துல்கர் சல்மான் கிளைமேக்ஸில் வந்த காட்சியெல்லாம் தியேட்டர் தெறித்தது.
இந்நிலையில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள காந்தா திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பிய நிலையில், என்னடா 'காந்தா' என பழைய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாரே என பலரும் ட்ரோல் செய்த நிலையில், உலகத்தரமான சினிமாவை கொடுக்கும் அவரது முயற்சியில் வெற்றிக்கோப்பையை தட்டித் தூக்கிவிட்டார் என நேற்று மாலை திரையிடப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி மூலம் தெரிய வந்துள்ளது

நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரசிகர்களின் பார்வைக்கு வரும் காந்தா திரைப்படம் இந்த ஆண்டின் ஆகச் சிறந்த படைப்பு என்று இப்போதே ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கி விட்டனர்.
நடிப்புச் சக்கரவர்த்தி: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரகனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காந்தா திரைப்படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை பார்த்துவிட்டு டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே "நடிப்புச் சக்கரவர்த்தி" என ராணா டகுபதி பாராட்டியிருந்தார். இந்நிலையில், இதற்கு பிறகு வரும் படங்களில் கூட துல்கர் சல்மான் பெயருக்கு முன்பாக "நடிப்புச் சக்கரவர்த்தி" என்கிற பட்டத்தை போட வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
தேசிய விருது: நடிப்பின் நாயகனாகவே துல்கர் சல்மான் காந்தா படத்தில் தனது ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்தி தான் மம்முக்கா பையன் என்பதை நிரூபித்துள்ளார். கண்டிப்பாக காந்தா படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருது கொடுத்தே ஆக வேண்டும் என துல்கர் சல்மான் ஆர்மியினர் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே காந்தாரா படத்துக்காக ரிஷப் ஷெட்டியின் நடிப்பை பார்த்துவிட்டும் ரசிகர்கள் அவருக்கு தேசிய விருதை தர வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், இருவருக்கும் பிரித்து தரலாம் என்றும் சொல்கின்றனர்.
4 ஸ்டார் தரலாம்: செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம், ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கியுள்ளது. முதல் பாதி குரு-சிஷ்யன் ஈகோ மோதல்கள், நட்சத்திரங்களுக்கு இடையேயான காதல் என்று பயணிக்க, இரண்டாம் பாதி ஹிட்ச்காக் பாணியிலான விசாரணை த்ரில்லராக மாறி, இறுதிக்காட்சி பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
துல்கர் சல்மான், தொழில் மீது தீவிர கவனம் கொண்ட 'டிகே மகாதேவன்' கதாபாத்திரத்தில் அசத்தலான, உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்று பலரும் பாராட்டுகின்றனர். இடைவேளை காட்சியிலும், உச்சக்கட்ட காட்சியிலும் கண்ணாடியில் வெளிப்படும் அவரது நடிப்புத் திறமை, கதாபாத்திரத்தின் ஆழத்தை எடுத்துக்காட்டுகிறது. முடிவில் அவர் தனது பழைய நிலைக்குத் திரும்பும் விதம், கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்துகிறது.
சமுத்திரகனியின் நடிப்பு பாராட்டுக்குரியது. இந்திய சினிமாவில் சிறந்த துணை நடிகர்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் ஒரு புதுமையான கண்டுபிடிப்பு. ஈகோவும் சூழ்ச்சியும் நிறைந்த கதாபாத்திரங்களுக்கு மத்தியில், அவரது அப்பாவித்தனம் படம் முழுவதும் தனித்து நிற்கிறது. அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களின் மனதில் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
ராணா டகுபதி, அதீத குணம் கொண்ட விசாரணை அதிகாரியாக வந்து, இந்த அழகான படத்திற்கு கூடுதல் மசாலா சேர்த்துள்ளார். அவரது கதாபாத்திரமும் இறுதிக் காட்சியில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாக, ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை, டேனியல் சான்செஸ்-லோபஸின் ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவை தனித்து நிற்கின்றன. இது இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக காந்தா மாறியுள்ளது என ராஜசேகர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











