டப்பிங் காசு கூட கிடைக்காது.. சூர்யாவிற்கு இப்படி ஒரு நிலையா?.. காப்பானை யாராவது காப்பாற்றுங்கள்!
நடிகர் சூர்யா நடித்த காப்பான் படம் தெலுங்கில் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகர் சூர்யா நடித்த காப்பான் படம் தெலுங்கில் மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது.
நடிகர் சூர்யா நடித்த காப்பான் படம் கடந்த வாரம் வெளியானது. கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படம் தனக்கு பெரிய பிரேக் கொடுக்கும் என்று நடிகர் சூர்யா நினைத்தார்.
வரிசையாக படங்கள் தோல்வி அடைந்ததை அடுத்து குறைந்தபட்சம் இந்த படமாவது வசூல் ரீதியாக வெற்றிபெறும் என்று அவர் நினைத்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை.

ஈர்க்கவில்லை
காப்பான் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் பெரிய அளவில் மக்களை ஈர்க்கவில்லை. படம் சாதாரண மசாலா படம் போல இருக்கிறது. அதே கே வி ஆனந்த் கதைதான் இதுவும். இதில் வித்தியாசம் இல்லை என்று பலரும் கூறினார்கள்.

மோசம்
படத்தின் ரிவ்யூக்களும் சரியாக வரவில்லை. தமிழில் பெரிய ரிவ்யூக்கள் எதிலும் காப்பான் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வரவில்லை. நெட்டிசன்கள் ரிவ்யூக்களும் காப்பான் படத்திற்கு ஆதரவாக வரவில்லை. இதனால் என்ஜிகே படத்திற்கு பின் காப்பான் மீண்டும் சூர்யாவிற்கு தோல்விப்படமாக அமைந்துள்ளது.

ஆனால் என்ன
பொதுவாக சூர்யா படம் தமிழில் தோல்வி அடைந்தாலும் தெலுங்கில் வெற்றிபெறும். முக்கியமாக என்ஜிகே தவிர மற்ற எல்லா படங்களும் சூர்யாவிற்கு தெலுங்கில் நல்ல வருமானம் வாங்கி கொடுத்துள்ளது. சூர்யாவிற்கு தெலுங்கில் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சான் படம் கூட தெலுங்கில் நன்றாக ஓடியது.

எப்படி
ஆனால் சூர்யாவே எதிர்பார்க்காத அளவிற்கு தற்போது தெலுங்கில் இந்த படம் தோல்வி அடைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால் படத்தை டப்பிங் செய்வதற்கும் , தெலுங்கில் விளம்பரம் செய்வதற்கு போட்ட காசை எடுப்பதே கடினம். சூர்யாவின் வாழ்நாளில் மிக மோசமான தெலுங்கு ரிலீஸ் இதுதான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











