அடுத்தடுத்து 2 வருது.. சூர்யா ரசிகர்களே.. ரசித்து மகிழ நீங்க ரெடியா?

சென்னை: ஒன்றரை ஆண்டுகளாக சூர்யா நடிப்பில் புதுப்படம் ஏதும் ரிலீஸ் ஆகாத நிலையில், நொந்திருந்த ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. இதற்கு அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சூர்யா.

Kaappaan release date announced

போன தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த என்ஜிகே திரைப்படம், செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிபோனது. இந்நிலையில் மே 31-ம் தேதி என்ஜிகே வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடையில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் சூர்யா.

என்ஜிகே விற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், புத்தாண்டு அருகே காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் மோகன்லால், சூர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படும் என முன்னரே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் சூர்யா. அப்படி பார்த்தால் ரிலீஸ் அறிவிப்பை முதலில்

வெளியிட்டது காப்பான் படம் தான்.

எது எப்படியோ... ஒன்றரை ஆண்டுகளாக சூர்யாவை திரையில் காணாத ரசிகர்களுக்கு, அடுத்தடுத்து இரு படங்களை கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X