பெரியார் பற்றி அதிரடியாக பேசிய சூர்யா.. கடுப்பில் பாஜக தலைகள்.. காப்பான் படத்திற்கு விளம்பரம் ரெடி!
பெரியார் குறித்தும் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸே குறித்து நடிகர் சூர்யா பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
Recommended Video
சென்னை: பெரியார் குறித்தும் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸே குறித்து நடிகர் சூர்யா பேசியது பெரிய வைரலாகி உள்ளது.
நடிகர் சூர்யா சமீப காலமாக அரசியல் குறித்து தீவிரமாக பேசி வருகிறார். அதிலும் மத்திய அரசு எடுக்கும் தவறான முடிவுகள் குறித்தும், தமிழக அரசை விமர்சித்தும் தீவிரமாக அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.
கடந்த மாதம் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது தமிழகம் முழுக்க பிரபலம் ஆனது. பாஜக கட்சியை சூர்யாவின் கருத்து கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

என்ன சொன்னார்
புதிய கல்விக்கொள்கையில் நிறைய குளறுபாடுகள் இருக்கிறது. ஏழை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து புகார்களை அடுக்கி இருந்தார். மிக தெளிவாக, நியாயமான கேள்விகளை அவர் முன் வைத்து இருந்தார்.

இப்போது என்ன
இந்த நிலையில் காப்பான் பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பேசியது இன்னும் சர்ச்சையாகி உள்ளது. அவர் தனது பேச்சில், கோட்ஸே காந்தியை சுட்ட பின் பெரிய பிரச்சனை நடந்தது. இதனால் பெரிய மத பிரச்சனை வந்தது. நாடு முழுக்க பெரிய கலவரம் ஏற்பட்டது. மத ரீதியான பிரச்சனை இதனால் ஏற்பட்டது.

ஆனால் பெரியார்
இதை கேட்டவுடன் பெரியார் தனது தொண்டர்களிடம், உடனே அந்த துப்பாக்கியை கொண்டு வாங்க. அந்த துப்பாக்கியை உடைத்து நொறுக்குங்கள். சுக்கு நூறாக உடைத்து நொறுக்குங்கள் என்றார். ஆனால் பெரியார் ஏன் துப்பாக்கியை உடைக்க சொல்கிறார் என்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பிப் போனார்கள்.

வெறும் துப்பாக்கி
இதற்கு பின் விளக்கமளித்த பெரியார், கோட்ஸே வெறும் துப்பாக்கிதான். ஆம், கோட்ஸே வெறும் துப்பாக்கிதான், அவருக்கு பின் பெரிய விஷயம் இருக்கிறது. நீங்கள் ஏன் வெறும் துப்பாக்கி மீது கோபம் கொள்கிறீர்கள் என்று பெரியார் கூறினார், என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

கோபம்
இந்த நிலையில் சூர்யா மீது பல்வேறு காரணங்களால் கோபமாக இருக்கும் பாஜக தலைவர்கள் தற்போது இந்த விஷயத்தாலும் சூர்யா மீது கோபம் அடைந்துள்ளனர். கோட்ஸே குறித்தும், காந்தி குறித்து சூர்யா அழகான எடுத்துக்காட்டை கூறி அதிரடியாக பேசி உள்ளார். இதுதான் பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பலர்
இதனால் இப்போதே பாஜகவை சேர்ந்த தொண்டர்கள் பலர் இணையத்தில் சூர்யாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். காப்பான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இப்போதே சிலர் டிவிட் செய்ய தொடங்கிவிட்டனர்.

இலவசம்
இந்த நிலையில் காப்பான் படத்திற்கு பாஜக இந்த முறை இலவசமாக விளம்பரம் செய்யுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே அரசுக்கு எதிரான வசனங்களால் மெர்சல், சர்க்கார் போன்ற படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் விளம்பரம் செய்தனர். தற்போது அதே விளம்பரம் காப்பான் படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











