Kaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம!
சூர்யாவின் காப்பான் திரைப்படம் நிச்சயம் சூப்பர் ஹிட் படம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள காப்பான் திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட என்ஜிகே திரைப்படம் தோல்வி அடைந்ததால், காப்பானின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறார் சூர்யா. அவரது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை என்றே தெரிகிறது.
உலகம் முழுவதும் காப்பான் இன்று ரிலீசாகியுள்ளது. அதிகாலை காட்சியை பார்த்த ரசிகர்கள், படத்தை கொண்டாடி வருகிறார்கள். அயன் படத்தை போல் காப்பான் செம எண்டர்டெயினிங்காக இருக்கிறது என விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. காப்பான் படம் குறித்து ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்துகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
நிச்சயம் பிளாக்பஸ்டர்
"காப்பான் நிச்சயம் பிளாக்பஸ்டர் படம். விறுவிறுப்பான திரைக்கதையும், சண்டைக்காட்சிகளும் நிறைந்திருக்கிறது. அயன் படம் போல் ஒரு சரியான கமர்சியல் எண்டர்டெயினர் படமாக வந்துள்ளது காப்பான். சிங்கம் 2 போல் இந்த படமும் மாபெரும் வெற்றி அடையும்" என இந்த ரசிகர்கள் தெரிவித்துள்ளார்.
ஜெட் வேகம்
"முதல் பாதி படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது. இரண்டாம் பாதியில் அதிரடி திருப்பங்கள் நிறைய இருக்கின்றன. க்ளாசி பிளாக்பஸ்டர் தான். சூர்யாவுக்கு இது வெற்றி படம் தான். மோகன் லால் அசத்தலாக நடித்துள்ளார். கே.வி.ஆனந்த் சார் அந்த விண்ணில் விண்மீன் பாடலை தூக்கிடுங்க ப்ளீஸ்", என இவர் விமர்சித்துள்ளார்.
அயன் போல் உள்ளது
"தான் ஒரு தரமான இயக்குனர் காட்டியிருக்கிறார் கே.வி.ஆனந்த். நிறைய அதிரடி திருப்பங்கள் செமையாக உள்ளன. அயன் மாதிரி ஒரு படம் இது. சூர்யா, மோகன் லால், ஆர்யா என அனைவரையும் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்", என இவர் தெரிவித்துள்ளார்.
ரோலர் கோஸ்டர் ரைட்
"காப்பான் படம் தாறுமாறு. அயன் தேவா இஸ் பேக். என்னாமா திரைக்கதை அமைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். பின்னிட்டீங்க சூர்யா. மோகன் லால், ஆர்யா சூப்பர் நடிப்பு. அருமையான செய்தி படத்தில் உள்ளது. இந்த ரோலர் கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணாதீங்க", என இந்த ரசிகர் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











