»   »  கார்த்திகா-ஸ்வேதா

கார்த்திகா-ஸ்வேதா

Subscribe to Oneindia Tamil

கார்த்திகா, ஹரிக்குமார், ஸ்வேதா ஆகிய புதுமுகங்களைக் கொண்டு தூத்துக்குடி என்றொரு படம்தயாராகியுள்ளது.

கார்த்திகாவுக்கு சொந்த ஊர் தமிழ்நாடு. நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு தமிழ்ப் பெண்ணைஹீரோயினாக்கியிருக்கிறார்கள். சுனிதா ஹரி தயாரிக்கும் இந்தப் படத்தை கதை எழுதிய இயக்கியுள்ளது சாய்ராம்.

இதில் ஹீரோவாக அறிமுகமாகும் ஹரிக்குமார் ஒரு டான்ஸ் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில்ஏராளமான படங்களுக்கு நடன இயக்குனராக இருந்தவர். இதில் மகாதேவன் என்ற ரெளடி கேரக்டரில்நடித்துள்ளார்.

கார்த்திகாவுக்கு இதில் மல்லிகா என்ற துருதுரு பெண் வேடம். நன்றாகவே நடித்துள்ளார் என்கிறார்கள்.


தனம் என்ற எல்கேஜி டீச்சர் வேடத்தில் ஸ்வேதா என்பவர் அறிமுகமாகிறார். இவருக்கு சொந்த ஊர் ஆந்திரா.

டீச்சர் என்று சொல்லிவிட்டு அவருக்கு சரியான குத்துப் பாட்டுக்களை வைத்துள்ளார்கள். கிண்டிகிழங்கெடுத்துவிட்டாராம் ஸ்வேதா.

ஸ்வேதா போட்ட ஆட்டத்தைப் பார்த்து, போட்டிக்கு நானும் குத்து டான்ஸ் பண்ணுவேன் என்று கார்த்திகாவும்கிளம்பிவிட அவருக்கும் வெண்ணெய் தடவிய பிரட் மாதிரி கிளாமரில் நனையும் ஒரு பாட்டை சொறுகிவிட்டுருக்கிறார்கள்.


ஸ்வேதாவுக்கு கொஞ்சமும் சளைக்காமல் கதகளம் பண்ணினாராம் கார்த்திகா. படத்தின் சூட்டிங்குக்காகதூத்துக்குடியில் நந் கணக்கில் வெயிலிலேயே நிற்க விட்டதில் கார்த்திகாவின் கலர் டல்லாகிவிட்டதாம். இதனால்இப்போது கலரை மீட்கும் வேலைகளில் இருக்கிறாராம்.

படத்திற்கு பிரவீண் மணி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை ஜீவனும் நடனத்தை ஹீரோ ஹரிகுமாரேகவனித்தாராம்.

தூத்துக்குடியில் துவங்கி திருச்செந்தூர், நாசெரத், மணப்பாடு, பாஞ்சாலங்குறிச்சி போன்ற இடங்களில் படத்தைஎடுத்து முடித்துள்ளார்கள்.

படத்தில் ரகுமான் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.


தூத்துக்குடின்னு சொன்னாலே வெட்டு, குத்துன்னு சொல்றாங்க. அந்த இமேஜுக்குப் பின்னால் இருக்கும்யதார்தத்தை வெளியில் சொல்லும் முயற்சி தான் இந்தப் படம் என்கிறார் இயக்குனர் சாய்ராம்.

படத்தில் கவர்ச்சியோடு நடிப்பிலும் கலக்கிய கார்த்திகாவுக்கு புலன் விசாரணை இரண்டாம் பாகம் படத்திலும்ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்துவிட்டது. இதில் இவரோடு ஹீரோ பிரசாந்த். கார்த்திகா தவிர காதல் செய்யவிரும்பு படத்தில் கலக்கிய அஸ்விதாவும் ஹீரோயினாக நடிக்கிறார்.

Please Wait while comments are loading...