பணம் ஒருவனை எந்த நிலைக்கு கொண்டு செல்லும் தெரியுமா?... பாராட்டுகளை பெறும் 'காசுரன்' டிரெய்லர்!

காசுரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை: 'காசுரன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

பணம் ஒருவனை எந்த நிலைக்கும் கொண்டு செல்லும் என்ற கருவை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள படம் "காசுரன்". இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீ "காசுரன்" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் டமால் டுமீல் படத்தை இயக்கியவர்.

Kaasuran official trailer out now

மேலும் இப்படத்தில் அங்கனா ஆர்யா, ஸ்ரீநிவாசன், அவினாஷ், கவிதா ராதேஷியாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்பட்ட "காசுரன்" படத்தை நண்பர்கள் 30 பேர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.

இந்த படத்தை ஜித்தா மோகன் இயக்கியுள்ளார். காசுரன் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரே படு மிரட்டலாக இருக்கிறது. "வேட்டையாடனும்னு முடிவு பண்ணிட்டா சிங்கமா தான் இருக்கனும்னு அவசியம் இல்ல.. நரியாகக் கூட இருக்கலாம்" என்ற வசனம், படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

இந்த டிரெய்லரை பார்த்து திரைத்துறையை சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X