Suriya - வீட்டுக்கு போனால் சூர்யா செமயா கவனிப்பார்.. ஆனால் அதில் ஒரு காரியம் இருக்கும்.. இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: Suriya (சூர்யா) வீட்டுக்கு போனால் சூர்யா பயங்கரமாக கவனிப்பார் ஆனால் அதிலும் ஒரு காரணம் இருக்கிறது என இயக்குநர் ஜியோ பேபி தெரிவித்திருக்கிறார்.

தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் ரொம்பவே கஷ்டப்பட்டு திறமையை வளர்த்து டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமூக கருத்துக்கள் கொண்டவையாக வருகின்றன. இதனால் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது.

Kaathal The Core Director Jeo Baby Talks about Actor Suriya

கங்குவா: கடைசியாக அவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகிவிட்டு விலகினார். இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் மொத்தம் பத்து மொழிகளில் வெளியாகவிருக்கிறதாம். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் நடிக்கிறார். இவ்விரண்டு படங்களுமே மெகா ஹிட்டாவது உறுதிதான் என இப்போதே பேசுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இவை தவிர்த்து ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலுவுடன் ஒரு படத்தில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.

சூர்யா - ஜோதிகா: இதற்கிடையே அவர் ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள். கோலிவுட்டில் அஜித் - ஷாலினிக்கு பிறகு ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஜோடி என்றால் சூர்யா - ஜோதிகாதான். இருவருக்குள்ளும் அன்பும், பரஸ்பர மரியாதையும் அவ்வளவு இருக்கும்.

காதல் தி கோர்: இந்த சூழலில் ஜோதிகா கடைசியாக காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். மம்மூட்டி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் அந்தப் படத்தின் இயக்குநர் ஜியோ பேபி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், "இப்படத்தின் கதையை ஜோதிகாவிடம் அவரது வீட்டுக்கு சென்று சொன்னேன். அப்போதுதான் முதன்முறையாக அங்கு சென்றிருந்தேன்.

வரவேற்ற சூர்யா: அந்த சமயத்தில் சூர்யாவும் அங்கு இருந்தார். எங்களை சூப்பராக வரவேற்ற அவர் நிறைய உணவு வகைகளை ஆர்டர் செய்தார். அனைவருக்குமே அந்த உணவு வகைகளை அவர்தான் பரிமாறினார். அவரது விருந்தோம்பலில் நாங்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தோம்.

காரியம் இருக்கு: சூர்யா அப்படி நடந்துகொண்டதை பற்றி ஷூட்டிங்கின்போது ஒருநாள் ஜோதிகாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ரொம்பவே பெருமையாகத்தான் பேசினேன். அதற்கு ஜோதிகாவோ, 'ஆம் இப்படி நண்பர்களோ உறவினர்களோ எங்கள் வீட்டுக்கு வரும்போது சூரியா வகை வகையான உணவுகளை ஆர்டர் செய்வார். அதில் அவருக்கு பிடித்த உணவு வகைகள் நிறைய இருக்கும். இப்படி விருந்தினர்கள் வரும்போதுதான் தனக்கு பிடித்த சாப்பாட்டை அதிகம் சாப்பிட முடியும் என்பதால் நிறைய உணவுகளை அவர் ஆர்டர் செய்வார்' என சொல்லி சிரித்தார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X