கல்யாணம் செஞ்சுக்கோங்க..கையில் தாலியுடன் காத்து கருப்பு கலை அலப்பறை..ஷாக்கான கரு பழனியப்பன்
சென்னை: Kaathu Karupu Kalai (காத்து கருப்பு கலை) யூட்யூப் சேனல் மூலம் சர்ச்சைகளை சம்பாதித்திருக்கும் காத்து கருப்பு கலை ரியாலிட்டி ஷோவில் செய்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உலகம் தற்போது டிஜிட்டல் உலகமாக மாறிக்கொண்டிருக்கிறது. யாரேனும் ஒருவர் பிரபலம் ஆக வேண்டும் என்றால் அவரது கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனும் ஒரு யூட்யூப் சேனலும் இருந்தால் போதும் என்ற நிலைதான் உருவாகியிருக்கிறது. வித்தியாச வித்தியாச கண்டெண்ட்டுகளுடன் யூட்யூபில் தோன்றி அவர்கள் செய்யும் விஷயங்கள் பாராட்டும்படியும் இருக்கின்றன; முகம் சுளிக்கும் வகையிலும் இருக்கின்றன.

காத்து கருப்பு கலை: பாராட்டுக்களை பெற்று பிரபலமானவர்களின் புகழ் குறைவாக இருக்கிறது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்று பிரபலமடைந்தவர்களின் புகழ் அதிகம் உள்ளது. அந்த இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் காத்து கருப்பு கலை. ஆரம்பத்தில் சின்ன சின்ன வீடியோக்களை போட்டுக்கொண்டிருந்தவர் காலம் செல்ல செல்ல சர்ச்சைக்குரிய வீடியோக்களை போட ஆரம்பித்தார்.
சாதனா: உச்சக்கட்டமாக திருச்சி சாதனாவுடன் அவர் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது; அதே அர்த்தத்தில் பாடல் பாடுவதும் என எல்லை மீறியே சென்றார். அதுமட்டுமின்றி சமீபத்தில் ஷகீலா காத்து கருப்பு கலையை பேட்டி எடுத்தார். அப்போது ஷகீலாவிடமும் டபுள் மீனிங்காக பேச; ஷகீலா தரமான பதிலடி கொடுத்தார். மேலும் அந்தப் பேட்டியில் தான் எம்.பி எலெக்ஷனில் நிற்கப்போவதாகவும் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.
பயில்வான் ரங்கநாதன்: பேட்டி கொடுத்திருந்த காத்து கருப்பு கலை திடீரென பயில்வான் ரங்கநாதனை பேட்டி எடுக்கவும் செய்தார். அந்த அளவுக்கு காத்து கருப்பு கலை மீதான கவனம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் எல்லாம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரை கண்டுகொள்ளாமல் விட்டாலே தவறான கண்டெண்ட் போடுவதை குறைத்துக்கொள்வார் என்றும் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர்.
அலப்பறை: இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் காத்து கருப்பு கலை கலந்துகொண்டார். அப்போது ஒருவர் அவரிடம், ஏன் இப்படி நெகட்டிவ் விஷயங்களை செய்து பிரபலமாக வேண்டும் என கேட்டார். அதற்கு பதிலளித்த கலை, 'நான் இரண்டு வயதில் ஒரு பெண்ணை காதலித்தேன். அவளோ வேறு ஒருவரை காதலித்தார். எனக்கு காதல் தோல்வி. அப்போதிருந்து எனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற வெறி.
எனக்கு தேவை பிரபலம் ஆக வேண்டும். அப்போதுதான் பெண்கள் என்னுடன் செல்ஃபி எடுக்கிறார்கள். திருமணம் ஆகும். எனக்கு திருமணம் ஆகிவிட்டால் நான் யூட்யூபில் நல்ல கண்டெண்ட் போடுகிறேன். இல்லை யூட்யூபை விட்டே வெளியேறுகிறேன். இதோ இங்கு கல்யாணம் ஆன பெண்கள், ஆகாத பெண்கள் வந்திருக்கிறீர்கள். யாராவது என்னை கல்யாணம் செஞ்சிக்கிறீங்களா என கேட்டு கையில் தாலியை எடுத்தார்.

இதனைக் கண்டு பலரும் ஷாக்காகினர். மேலும் அவர் ஆம்பளையா இருந்தாலும் ஓகேதான் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என சொல்லிவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கரு.பழனிப்பனை பார்த்து யாரையாவது எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று ஒரே போடாக போட்டார். உடனே அதிர்ச்சியடைந்த பழனியப்பன், தம்பி இது விவாத நிகழ்ச்சினு நினைச்சியா இல்ல வேறு நிகழ்ச்சினு நினைச்சியா ஏன் ப்பா எனட்ட இத செய்ய சொல்ற என்றார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதேசமயம் இதுபோன்ற எல்லை மீறும் கலையை இனியாவது சேனல்கள் புறக்கணிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











