எனக்கு ரெண்டு ஹார்ட்.. ரெண்டு லவ்.. ரெண்டுமே பிரேக் அப் ஆகிடுச்சு.. அனிருத்தின் லவ் ட்ரீட்!

சென்னை: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

Nayanthara Vignesh shivan first Success | Rowdy Pictures, Kuzhangal

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

அனிருத் இசையில் காதலர் தின ஸ்பெஷலாக ரெண்டு காதல் பாடல் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

இமிடியேட் ரிங்டோன்

இமிடியேட் ரிங்டோன்

ராக்ஸ்டார் அனிருத் தனுஷின் 3 படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்து, இப்போ விஜய்சேதுபதிக்காக தனது 25வது படத்திற்கு இசையமைத்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு செம ரொமான்ட்டிக்கான பாடலை இசையமைத்து பாடியுள்ள அனிருத்தின் 'ரெண்டு காதல்' பாடல் காதலர்களின் இமிடியேட் ரிங் டோனாக மாறியுள்ளது.

ரெண்டு ஹார்ட்

ரெண்டு ஹார்ட்

லிரிக் வீடியோவின் தொடக்கத்திலேயே பேசும் படத்தின் ஹீரோ விஜய்சேதுபதி, சார் எல்லாருக்குமே ஒரு ஹார்ட் தான சார்? எனக்கு ரெண்டு ஹார்ட் சார்.. ரெண்டு பேரை ஒரே சமயத்துல லவ் பண்ணேன்.. ஒரே சமயத்துல ரெண்டு பேரையும் பிரிஞ்சுட்டேன். ஒரு லவ் ஃபெயிலியர் வலியையே தாங்க முடியாது, எனக்கு ரெண்டு லவ் ஃபெயிலியர், போய் ஃபீல் பண்ணிட்டு வரேன் என அனிருத்துக்கு பாட வழி விடுகிறார்.

ரெண்டாகி துண்டானதே

இயக்குநர் விக்னேஷ் சிவனே நயன்தாராவை நினைத்து உருகி ஏகப்பட்ட பாடல்களை எழுதி வருகிறார். இந்த ரெண்டு காதல் பாடலையும் உருகி உருகி எழுத, அனிருத்தும் சேர்ந்து உருகி காதல் ஒன்றாக வந்து இரண்டானதே.. காதல் ரெண்டாகி துண்டானதே என விரல் வலிக்க வலிக்க கீபோர்ட் தேய தேய இசையமைத்து ஒட்டுமொத்த காதலையும் கொட்டியுள்ளார்.

விக்கி நயன்

விக்கி நயன்

காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் பாடல் ஒரு பக்கம் டிரெண்டாக மற்றொரு பக்கம் நயன்தாரா ஹாஷ்டேக் கன்னா பின்னாவென டிரெண்டானது. அதற்கு காரணம் காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் - நயன்தாரா வெளியிட்ட அந்த க்யூட் ரொமான்டிக் போட்டோ தான்.

சமந்தாவும் ஜாய்னிங்

சமந்தாவும் ஜாய்னிங்

நானும் ரவுடி தான் படத்தில் நடித்த விஜய்சேதுபதியும், நயன்தாராவும் மீண்டும் நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து சமந்தா விலகி விட்டார் என சில ரூமர்கள் கிளம்பிய நிலையில், நானும் இருக்கேன் பா என நயன்தாராவுடன் நடித்த அனுபவங்களையும் சமீபத்தில் ஷேர் செய்து வைரலாக்கினார்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

டைட்டிலை போலவே கதையும் வித்தியாசமாக இருக்கும் என விஜய்சேதுபதியின் இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள நெற்றிக்கண் படத்தைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X