காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலரில் டபுள் மீனிங்.. தணிக்கைக்குழு அளித்த சான்றிதழ் !

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு அளித்த சான்றிதழ் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி ராம்போ கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் நானும் ரவுடிதான் திரைப்படத்திற்குப் பின்னர் இரண்டாவது முறையாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விஜய்சேதுபதியை பார்க்கலாம் சமீபகாலமாக அவர் நடிக்கும் கேரக்டர்களில் காதல் ரசம் பொங்க ஒரு கிளாமர் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார் .

எகுறும் எதிர்பார்ப்பு

எகுறும் எதிர்பார்ப்பு

நயன்தாரா, சமந்தா இருவருக்குமே மிகப்பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர்கள் தனித்தனியாக நடித்தாலே பார்ப்பதற்கு தனி கூட்டம் உள்ள நிலையில் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் ஏகுறி உள்ளது.

காமெடிக்கு பஞ்சமில்லை

காமெடிக்கு பஞ்சமில்லை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்து விட்டனர்.

தணிக்கைக்குழு சான்றிதழ்

தணிக்கைக்குழு சான்றிதழ்

காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலரில்.. உன்ன கல்யாணம் பண்ணிட்டான்...என்ன பண்ணிட்டான் என்று சமந்தா பேசும் டபுள் மீனிங் வசனங்கள் நிச்சயம் ஒரு சர்ச்சையை கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. இந்த டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் டிரைலரிலேயே இப்படி டபுள் மீனிங் வருதே என்று கேட்டு வரும் நேரத்தில், தணிக்கைக்குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X