கதீஜாவாக கலக்கும் சமந்தா... காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு!

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் அடுத்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டரை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

ரிலீசுக்கு தயார்

ரிலீசுக்கு தயார்

கடந்த ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்று தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது.

ப்ரமோஷன் பணிகள் துவக்கம்

ப்ரமோஷன் பணிகள் துவக்கம்

இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளையும் தற்போது படக்குழு துவக்கியுள்ளது. ஏற்கனவே அனிருத் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை இயக்குநர் வெளியிட்டு வருகிறார்.

விஜய் சேதுபதி போஸ்டர்

விஜய் சேதுபதி போஸ்டர்

இன்று காலை படத்தின் நாயகன் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தில் அவர் ராம்போ என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹோந்திரன் என்பதன் சுருக்கமே ராம்போ என்றும் தெரிவிக்கப்பட்டது.

2வது போஸ்டர் வெளியீடு

2வது போஸ்டர் வெளியீடு

இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் சமந்தாவின் கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தில் கதீஜா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அவர் மிகவும் அழகாக காணப்படுகிறார்.

இரண்டு நாயகிகள்

இரண்டு நாயகிகள்

படத்தில் விஜய் சேதுதிக்கு நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு இடையிலான காதல் படத்தில் கதைக்களமாக கொள்ளப்பட்டுள்ளது. படத்தின் பாடல்களும் இதைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X