அந்த பக்கம் சமந்தா.. இந்த பக்கம் நயன்தாரா.. நடுவுல யாரு பாருங்க..காத்து வாக்கு ரெண்டு காதல் அப்டேட்!
சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

3 பாடல்கள்
இந்த படத்திலிருந்து ரெண்டு காதல், டூடூடூ, நான் பிழை என இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் மொலோடி பாடலாக உருவாகி உள்ள நான் பிழை பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அனிருத் இசையில், ரவி மற்றும் சாஷா திருப்பதி குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

நாளை டீசர்
இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் ஆர்வம்
சமந்தாவும், நயன்தாராவும் முதன்முறையாக இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சூப்பர்டீலக்ஸ் படத்திற்கு பிறகு சமந்தாவை தமிழ் திரைப்படங்களில் பெரிதாக பார்க்க முடியவில்லை. புஷ்பா படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடி சென்றதால் அவரை திரையில் காண தமிழ் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











