2 வாரங்களில் 2 கோடி வியூஸ்… விக்னேஷ் சிவன் ஹாப்பி அண்ணாச்சி
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்தப் படம் டிசம்பரில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் படத்தின் டூ டூ டூ பாடல் இரண்டு வாரங்களில் 2 கோடி வியூஸ்களை பெற்றுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் அடுத்த மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு சிறப்பாக செய்து வருகிறது.

3வது முறையாக ஜோடி
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இந்தப் படத்தின் மூலம் 3வது முறையாக இணைந்துள்ளனர். குறிப்பாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர்கள் இணையும் இரண்டாவது படம் இது. முதல்முறையாக நானும் ரவுடிதான் படத்தில் அவர்கள் ஜோடி பேசப்பட்டது. அந்தப் படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார் நயன்தார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சமந்தா
இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின்மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த ஜோடி முந்தைய படங்களில் பெற்ற வவேற்பை இந்தப் படத்திலும் பெறும் என்று எதிர்பார்க்கலாம். படத்தில் கூடுதலாக சமந்தாவும் இணைந்துள்ளது மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அனிருத் இசை
இந்தப் பட,த்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக டூ டூ டூ பாடல் வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக மாறியுள்ளது. இந்தப் பாடலில் அனிருத் போட்டுள்ள ஆட்டமும் சிறப்பாக அமைந்துள்ளது.

2 கோடி வியூஸ்
இந்நிலையில் இந்தப் பாடல் 2 வாரங்களில் 2 கோடிக்கும் அதிகமான வியூஸ்களை யூடியூபில் பெற்றுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவள் பெருமையுடன் தெரிவித்துள்ளார். மிர்ச்சி டாப் 20 பாடல்கள் வரிசையில் இந்தப் பாடல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதையும் அவர் பகிர்ந்துள்ளார். முதலாவதாக எனிமி படத்தின் தம் தம் பாடல் தொடர்ந்து உள்ளது.


Click it and Unblock the Notifications











