Don't Miss!
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Automobiles
கால்தடம் பதிச்சாச்சு... இனி ஆட்டம் வெறி தனமா இருக்க போகுது! ரெண்டு தரமான கீவே ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
- Finance
இனி WFH நிரந்தரம்.. கொரோனா இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்கள எல்லோரும் ஈஸியா ஏமாத்திருவங்களாம்... முட்டாள்த்தனம் இவங்ககூடவே பிறந்ததாம்...!
- News
பேரறிவாளனுக்கு 19 வயசு... காலையில அனுப்புறோம்னு கூட்டிட்டு போனாங்க - அற்புதம்மாளின் உருக்கமான பேட்டி
- Sports
ஐபிஎல்-ல் இருந்து கேன் வில்லியம்சன் திடீர் விலகல்.. சிக்கலில் சிக்கிய ஐதராபாத் அணி.. காரணம் என்ன ?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நயனை நினைத்து எழுதியிருப்பாரோ? 2 மில்லியன் பார்வைகளை கடந்த நான் பிழை பாடல்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.
இந்தப் படத்தின் லிரிக் வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
24 மணிநேரத்தில் பாடல் 2.4 மில்லியன் வியூஸ்களை தற்போது பெற்றுள்ளது.
குண்டுமல்லி
கணக்கா
செம
க்யூட்டா
இருக்கும்
நித்யாமேனன்!

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

மீண்டும் கூட்டணி
நானும் ரவுடிதான் என்ற படத்தில் இணைந்த விஜய் சேதுபதி -நயன்தாரா -விக்னேஷ் சிவன் கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. கூடுதல் சிறப்பாக படத்தில் சமந்தாவும் உள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அனிருத் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது.

நான் பிழை... நீ மழலை பாடல்
ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் எழுத்தில் நான் பிழை... நீ மழலை என்ற மெலடி பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கேட்கும் ரசிகர்கள் காற்றில் பறப்பதாய் உணர்கிறார்கள்.

ஒரே நாளில் 2.4 மில்லியன் வியூஸ்
இந்நிலையில் பாடல் வெளியாகி 24 மணிநேரத்தில் 2.4 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. லிரிக் வீடியோ பாடலுக்கு ரசிகர்கள் இத்தகைய வரவேற்பை கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் கவிதைத்தனமாக உள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கம்
விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப்படம் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ள நிலையில் விரைவில் ரிலீசாக உள்ளது.

ரவுடி பிக்சர்சின் வெளியீடு
கடந்த ஆண்டில் ரவுடி பிக்சர்சின் நெற்றிக்கண், ராக்கி படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன. மேலும் தொடர்ந்து 4 படங்களை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் வெளியீடாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாக உள்ளது.