சமந்தாவை சைட் அடிக்கும் விஜய்சேதுபதி.. காத்துவாக்குல ரெண்டு காதல் 'டிப்பம் டப்பம்' பாடல் ரிலீஸ்!

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலிருந்து 3வது பாடலான ''டிப்பம் டப்பம்'' பாடல் வெளியாகி உள்ளது.

இத்திரைப்படம் ஏப்ரல் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

நானும் ரௌடிதான் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை என முக்கோண காதல் கதை கொண்ட இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

முக்கோண காதல் கதை

முக்கோண காதல் கதை

கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

கலர்ஃபுல் டான்ஸ்

கலர்ஃபுல் டான்ஸ்

இப்படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற 'டுடுடு' என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. செம கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகளே படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தூண்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிப்பம் டப்பம் “

அனிருத்தின் 25வது படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்த ஏற்கனவே டுடுடு பாடலும், நான் பிழை பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றநிலையில், இத்திரைப்படத்திலிருந்து 3வது பாடலான "டிப்பம் டப்பம் " பாடல் சற்று முன்பு வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவனின் பாடல் வரியில் அந்தோணி தாசன் பாடி உள்ளார். அந்த பாடலில், சமந்தாவை பார்த்த விஜய் சேதுபதி அவரை வெச்ச கண் எடுக்காமல் அவரை கரெக்ட் பண்ண பிளான் போடுவது போல பாடல் உருவாகி உள்ளது. சற்றுமுன்பு வெளியான பாடலுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X