காத்துவாக்குல ரெண்டு காதல் மேக்கிங் வீடியோ... அட… விக்னேஷ் சிவன் என்னமா டான்ஸ் ஆடியிருக்காரு !

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நிறுவனமான ரெட் ஜெயிண்ட் வெளியிட்ட இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் இந்த காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் விஜய்சேதுபதி இப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா, சமந்தா இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

முக்கோண காதல் கதை

முக்கோண காதல் கதை

பகலில் டெக்ஸி டிரைவராகவும், இரவில் பவுன்சராகவும் வேலை பார்க்கும் விஜய்சேதுபதி , கண்மணி மற்றும் கதிஜா என்ற இரண்டு பெண்களை காதலிக்கிறார். வழக்கமான காதல் படம் போல் இல்லாமல் இருபெண், ஒரு ஆண் என ஒரு முக்கோண காதல் திரைப்படமாக இத்திரைப்படம் உள்ளது. ரம்போவா நடித்திருக்கும் விஜய்சேதுபதியின் நடிப்பு படத்திற்கு மற்றொரு பிளஸ்.

ஹிட் பாடல்

ஹிட் பாடல்

படம் வெளிவரும் முன்பே அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடலான 'டூ டூ டூ' மற்றும் நான் பிழை பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக டூடூடூ பாடல் திரையரங்கில் அனைவரையும் ஆட்டம் போடவைத்தது. ஆனால், படத்தைப்பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் நயன்தாராவைவிட சமந்தாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாக கூறியிருந்தார்.

Recommended Video

ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!
மேக்கிங் வீடியோ

மேக்கிங் வீடியோ

தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவெளியிட்டுள்ளது. இந்தவீடியோவில், விக்னேஷ் சிவன் 'டூ டூ டூ' பாடலுக்கு ஸ்டெப் போட்டு ஆட்டம் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், அட.. விக்னேஷ் சிவன் என்னமா டான்ஸ் ஆடியிருக்காரு என்று கேட்டு வருகின்றனர் . இத்திரைப்படம் உலக அளவில் இதுவரை 50 கோடி வசூலை ஈட்டி உள்ளதாக தெரிவிக்கின்றனர் பல வருடங்கள் கழித்து விஜய் சேதுபதியின் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X