Don't Miss!
- News
"மளிகை கடைக்குள்ளேயே".. லாஸ்ட் மினிட்டில் மோப்பம் பிடித்த போலீஸ்.. ஒரு உயிரே போயிடுச்சே.. ஐயோ
- Lifestyle
அஸ்வினி நட்சத்திரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Finance
தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது.. அதானி பற்றி ஹிண்டன்பர்க் ரிசர்ச்..!
- Automobiles
புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
- Technology
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
10 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட "நான் பிழை"!
சென்னை: நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்
தி பேமிலி மேன் வெப் சீரிஸை தொடர்ந்து இந்தி பட உலகிலும் கால் தடத்தை பதித்து வரும் சமந்தா இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்
மிகவும் வித்தியாசமான அதே சமயம் காதல் கதை களத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் நான் பிழை பாடல் இப்பொழுது 10 மில்லியன் பார்வையாளர்களை தொட்டு இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது
ஒரு லட்ச ரூபாய் அபராதம், விமர்சனத்தை நீக்க பல லட்சம் செலவு செய்த விஜய்.. தீர்ப்பின் முக்கிய தகவல்கள்

காது கேட்காத மாற்றுத்திறனாளி
தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக கலக்கிக் கொண்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு நானும் ரவுடி தான் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா காது கேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.

மீண்டும் இணைந்த கூட்டணி
குறிப்பாக அனிருத் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. காதல், காமெடி , சூப்பர் ஹிட் பாடல்கள் என அனைத்து அம்சங்களும் கொண்ட நானும் ரவுடி தான் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல்
விஜய்சேதுபதி நயன்தாராவை தொடர்ந்து இந்த முறை நடிகை சமந்தாவும் கூடுதலாக இணைந்துள்ளார். மெகா கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான காதல் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது. தி பேமிலி மேன் வெப் சீரிஸ்வெற்றிக்குப் பிறகு சமந்தா ஹிந்தி திரைப்படத் துறையிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வர முதல் முறையாக நயன்தாரா மற்றும் சமந்தா இந்தப் படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

10 மில்லியன் பார்வையாளர்களை
வழக்கம்போல விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் சில வாரங்களுக்கு முன்பு காத்துவாக்குல காதல் படத்திலிருந்து 'நான் பிழை" என்ற அட்டகாசமான ரொமான்டிக் பாடல் வெளியானது. விக்னேஷ் சிவனின் வரிகளில் அனிருத்தின் இனிமையான இசையில் வெளியான இந்த பாடல் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. இந்த நிலையில் " நான் பிழை " பாடல் யூடியூப் தளத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.