விஜய் சேதுபதியின் ‘’காத்துவாக்குல ரெண்டு காதல்“ .. எப்போ ரிலீஸ் தெரியுமா ?

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தை டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காத்துவாக்குல இரண்டுகாதல்

காத்துவாக்குல இரண்டுகாதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளனர்

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் பாடல், பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியானது. இதையடுத்து, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2வது பாடல் 'டூ...டூ...டூ... விக்னேஷ் சிவன் இன்று நாள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுத, அனிருத், சுனிதி சௌஹான், சஞ்சனா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடல் இணையத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இறுதிகட்டபணிகள்

இறுதிகட்டபணிகள்

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டிசம்பரில்

டிசம்பரில்

இந்நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X