சமந்தா விலகலையாமே.. பூஜையுடன் தொடங்கியது நயன்தாராவின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஷூட்டிங்!

By

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார்.

இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

நயன்தாரா காதல்

நயன்தாரா காதல்

2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஹிட்டானது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் பட ஷூட்டிங்கில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. அந்தப் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

மெகா பட்ஜெட்

மெகா பட்ஜெட்

கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நந்தா உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். பெரிய கவனிப்பை பெறவில்லை. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருந்தார். அதை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

பட்ஜெட் அதிகமானதால் அந்தப் படத்தை தயாரிக்க, அவர்கள் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வேறு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்தார். அது காத்துவாக்குல ரெண்டு காதல். இதில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.

சமந்தா இல்லை

சமந்தா இல்லை

அவர் ஜோடியாக நயன்தாராவும் சமந்தாவும் நடிக்கின்றனர். இதற்கிடையில் நடிகை சமந்தா இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியானது. சமீபத்தில் கூட அவர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அவர் இந்தப் படத்தில் நடிப்பது உறுதி என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

நடிகர் விஜய் சேதுபதியும் நயன்தாராவும் நடித்திருந்த 'நானும் ரவுடிதான்' படம் ஹிட்டானதால், இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கும் அனிருத் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங், எப்போதோ தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாகத் தள்ளிப் போனது.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்தப் படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோவும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X