கதீஜாவுக்கு கிடைத்த வரவேற்பு.. சமந்தா செம ஹேப்பி வீடியோ.. 2ம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜாவாக நடித்த சமந்தாவுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ரசிகர்கள் கேள்விக்கு நேற்று பதில் அளித்த நடிகை சமந்தா, தற்போது காஷ்மீரில் இருந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

முதல் நாளை போலவே இரண்டாம் நாளும் படத்திற்கு எவ்வளவு வசூல் வந்துள்ளது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஷ்மீரில் இருந்து சமந்தா

காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியான சந்தோஷத்தை காஷ்மீரில் கொண்டாடி வருகிறார் நடிகை சமந்தா. விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் சமந்தா இணைந்துள்ள நிலையில், அந்த படம் முழுக்கவே காஷ்மீரில் படமாக்கப்பட்டு வருகின்றன. கதீஜாவுக்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ் தன்னை ரொம்பவே ஹேப்பி ஆக்கி உள்ளதாக நன்றி வீடியோ போட்டுள்ளார்.

ஜாலியா பார்க்கலாம்

ஜாலியா பார்க்கலாம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வித்தியாசமான முக்கோண காதல் படமாக வெளியாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும், படத்தை ஜாலியாக பார்க்கலாம் என தியேட்டருக்கு ரசிகர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். முதல் வாரத்தில் படம் நல்லாவே கலெக்ட் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் நாள் வசூல்

இரண்டாம் நாள் வசூல்

முதல் நாளில் தமிழ்நாட்டில் 5 கோடி ரூபாயையும் மொத்தமாக 6.45 கோடி ரூபாயையும் வசூல் செய்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இரண்டாம் நாளில் ஒட்டுமொத்தமாக 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை 11.45 கோடி ரூபாய் வசூலை காத்துவாக்குல ரெண்டு காதல் அள்ளி உள்ளது.

விக்னேஷ் சிவன் பேட்டி

விக்னேஷ் சிவன் பேட்டி

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இரண்டாம் பாதி சொதப்பலாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஏகே 62 படத்தை இவர் இயக்க வேண்டாம் என அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால், சமீபத்தில், விக்னேஷ் சிவன் அளித்த ஒரு பேட்டியில் ஏகே 62 படத்தை முடிந்த வரை சிறப்பான படமாக கொடுக்க உழைத்து வருகிறேன் எனக் கூறியிருப்பது ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

விஜய்சேதுபதி வரிசையாக

விஜய்சேதுபதி வரிசையாக

காத்துவாக்குல ரெண்டு காதல் வெளியாகி உள்ள நிலையில், விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்ததாக மாமனிதன் படம் திரைக்கு வருகிறது. அந்த படத்தைத் தொடர்ந்து கமலின் விக்ரம், மிஷ்கினின் பிசாசு 2 என வரிசையாக படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், அவர் நடிப்பில் கிடப்பில் கிடக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர், விடுதலை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X