நயன்தாரா, சமந்தா இருந்தும் ஓப்பனிங்கே இல்லையே.. காத்துவாக்குல ரெண்டு காதல் முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா என முன்னணி நடிகர்கள் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு முதல் நாளில் எதிர்பார்த்த அளவு ஓப்பனிங்கே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வியாழக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்துள்ள நிலையில், முதல் வாரத்தில் போதிய கலெக்‌ஷனை அள்ளி விடலாம் என படக்குழு திட்டமிட்டது.

விஜய்சேதுபதி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் இது தான் என்றும் கூறுகின்றனர்.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

காத்துவாக்குல ரெண்டு காதல் முதல் பாதி இருந்த அளவுக்கு இரண்டாம் பாதியும் இருந்திருந்தால் மிகப்பெரிய ஹிட் அடித்திருக்கும் என்கின்றனர் பெரும்பாலான விமர்சகர்கள். விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா என மூவருமே நடிப்பில் மிரட்டி உள்ளனர். இதில், சமந்தா சற்று கூடுதலாக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் இல்லாதது படத்திற்கு பெரும் பலவீனமாக மாறி உள்ளது.

பட்ஜெட் எவ்வளவு

பட்ஜெட் எவ்வளவு

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் 50 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், பெரும்பாலான தொகை நட்சத்திர நடிகர்களுக்கே சென்று விட்டது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் 68 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 4 கோட் அளவிற்கு முதல் நாளில் வசூல் செய்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக 6 கோடி ரூபாயை முதல் நாளில் இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறைவான தியேட்டர்கள்

குறைவான தியேட்டர்கள்

கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் இன்னும் கணிசமான தியேட்டர்களி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், வெறும் 450 தியேட்டர்களில் மட்டும் தான் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி உள்ளது. முதல் நாளிலேயே 6 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் வந்த நிலையில், முதல் வார முடிவில் 18 முதல் 20 கோடி வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 62 என்னாகும்

ஏகே 62 என்னாகும்

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என முன்னணி நடிகர்கள் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கே பல தியேட்டர்களில் காத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், ஏகே 62 படத்தின் நிலை என்ன ஆகும் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அஜித் ரசிகர்களே பலர், இயக்குநர் விக்னேஷ் சிவனை மாற்ற பரிசீலனை செய்யுங்க அஜித் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X