ஜோதிகாவிற்கு என்ன ஆச்சு..? 'காற்றின் மொழி' இசை வெளியீட்டு விழா திடீர் ரத்து
காற்றின் மொழி பாடல் வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது
Recommended Video

சென்னை: இன்று நடக்கவிருந்த காற்றின் மொழி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் நடித்திருக்கும் படம் காற்றின் மொழி. இந்தியில் வித்தியாபாலன் நடித்து வெளிவந்த 'தும்ஹரி சுலு' என்ற படத்தின் தமிழ் ரிமேக்கான இப்படத்தில், நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார்.

தற்போது படபிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை பிரசாத் லேப் அரங்கில் நடைபெறும் என அறிவித்திருந்தனர். பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பார்த்தபடி காற்றின் மொழி பாடல் வெளியீட்டு விழா நடைபெறவில்லை. பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக மதியம் ஒரு மணியளவில் திடீரென அறிவிக்கப்பட்டது.
திடீர் ரத்துக்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது நடிகை ஜோதிகாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஜோதிகாவுக்கு என்ன பிரச்சனை என்பது தெரிவிக்கப்படவில்லை, ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











