ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’... ஜூன் 4ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்!

காற்றின் மொழி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜூன் 4ம் தேதி துவங்குகிறது.

சென்னை: ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 4ம் தேதி துவங்குகிறது.

மொழி படத்திற்குப் பின் மீண்டும் இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு காற்றின் மொழி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Kaatrin Mozhi to start rolling from June 4

இந்தப் படம் கடந்தாண்டு இந்தியில் ரிலீசான, 'துமாரி சுலு' என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் இப்படத்தை சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்தார்.

எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராகும் குடும்பத்தலைவி சந்திக்கும் பிரச்சினைகள் தான் இப்படத்தின் கதைக்களம். இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தில் சுலோச்சனா என்ற நாயகி கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். அவரது கணவராக மானவ் கவுல் நடித்திருந்தார்.

Kaatrin Mozhi to start rolling from June 4

தமிழில் காற்றின் மொழி என்ற பெயரில் தயாராகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்தமாதம் நான்காம் தேதி ஆரம்பிக்கிறது. இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடிக்க இருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துச்சாமி, எடிட்டராக கே.எல்.பிரவீன் ஒப்பந்தமாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X