காற்றின் மொழி டீசர்: ஜோதிகாவை நிச்சயம் நீங்க இப்படி பார்த்திருக்க மாட்டீங்க!

சென்னை: காற்றின் மொழி திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது.

வாழ்க்கையின் ஆரம்பகாலங்களில் இருந்த குதூகலமும், கொண்டாட்டமும் சிலருக்குத்தான் எப்போதுமே நிலைத்திருக்கும். ஒரு காலகட்டத்தில் ரசிக்கப்படுபவர்கள் பிறகு ரசனைக்கு அப்பாற்பட்டவர்களாக மாறும் வாய்ப்புகள் அதிகம். அது சினிமாவில், குறிப்பாக கதாநாயகிகளுக்கு நன்றாகப் பொருந்தும். ஆனால் இவற்றையெல்லாம் பொய்யாக்கி, குஷி படத்தில் பார்த்தபோது ஏற்பட்ட ஒரு மெல்லிய உணர்வையும், மகிழ்வையும் இப்போதும் கொடுக்கும் ஒரு நடிகையாக ஜோதிகா இருக்கிறார்.

Kaatrin mozhi teaser released

செக்கச் சிவந்த வானம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மொழி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ராதா மோகனின் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் ஜோதிகா பண்பலைத் தொகுப்பாளராக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் ஜோதிகா செய்யும் குறும்புத்தனங்கள் அனைத்தும் அப்படியே அள்ளி கண்ணில் ஒத்திக்கொள்ளலாம் போல, அவ்வளவு அழகாக இருக்கிறது.

ஹெலோ பண்பலையில் உறவுச் சிக்கல்களை களையும் இரவு நேர நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோதிகா மாறியதும், அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் நம்மை நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் எனத் தெரிகிறது. அதற்கான விஷயங்கள் டீசரில் வெளிப்படுகின்றன.

ஹலோ.. ஹலோ என பல முறைகளில் சொல்ல முயற்சிப்பது.. உண்மையான அன்புக்கு முன்னால் என் அன்பு தோத்துப்போச்சு கோபால்.. என்று இழுத்துப் பேசுவது, விதார்த்துடன் கரண்டிச் சண்டையில் வெற்றிப்பெறுவது என பல இடங்களில் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

இப்படத்தில், விதார்த் ஜோதிகாவின் கணவரக நடித்துள்ளார். லஷ்மி மஞ்சு, சாண்ட்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். இப்படத்திற்கு ஏஎச். ஹாஷிப் இசையமைத்துள்ளார். முகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவும், கேஎல்.பிரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X