Kaavaalaa: "தமன்னாவுக்கும் கார் கொடுங்க..” வெளியானது காவாலா பாடல்... ரசிகர்கள் மீண்டும் கிறக்கம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தின் வெற்றியை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கார்களை பரிசாக கொடுத்து கொண்டாடினார்.

இந்நிலையில், ஜெயிலர் வெளியாகும் முன்பு இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை கொடுத்தது காவாலா பாடல் தான்.

தமன்னாவின் கவர்ச்சியான ஆட்டத்தால் ரசிகர்களை கிறங்க வைத்த காவாலா பாடலின் முழுமையான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 Kaavaalaa: Jailer Film Tamannaahs Kaavaalaa song full video released now

தமன்னாவுக்கு ஒரு கார் பார்சல்: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வெறித்தனமான கம்பேக் கொடுத்துள்ளது ஜெயிலர் திரைப்படம். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியானது. ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகி பாபு, மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே தரமான ஓபனிங் கிடைத்த ஜெயிலர், இதுவரை 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

பேட்ட, தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து தடுமாறிய சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெயிலரில் தாறுமாறாக மாஸ் காட்டினார். இதனால், ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு, தலா 1.5 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக கொடுத்து அசத்தினார் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் இருந்து காவாலா பாடலின் முழுமையான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டிருந்தார். அனிருத்தின் வைப் இசைக்கு, கிளாமர் லுக்கில் இறங்கி அடித்த தமன்னா, ரசிகர்களை கிறங்க வைத்திருந்தார். இதனால் காவாலா பாடலுக்காகவே ஜெயிலர் படம் பார்க்கலாம் என ரஜினி ரசிகர்கள் கூறிவந்தனர்.

 Kaavaalaa: Jailer Film Tamannaahs Kaavaalaa song full video released now

அதேபோல், ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சோஷியல் மீடியா ட்ராக்கர்களும், காவாலா பாடலை வைத்து ரஜினியை ட்ரோல் செய்து வந்தனர். 'தலைவரின் ஜெயிலர்' இப்போது 'தமன்னாவின் ஜெயிலர்' என மாறிவிட்டதாக டிவிட்டரில் கலாய்த்தனர். அந்தளவுக்கு காவாலா பாடலில் தமன்னாவின் ஆட்டம் அசரடித்திருந்தது. ஜெயிலர் தியேட்டரில் வெளியான போதும், இளசுகள் முதல் 80ஸ் கிட்ஸ் ரஜினி ரசிகர்கள் வரை காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டு என்ஜாய் செய்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது காவாலா பாடலின் முழுமையான வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது படக்குழு. இதனையடுத்து இப்போதும் காவாலா பாடலை கொண்டாடி வரும் ரசிகர்கள், தமன்னாவுக்கும் ஒரு கார் கொடுக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், காவாலா பாடல், தமன்னா போன்ற ஹேஷ்டேக்குகளையும் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X