எல்லையோர மாவட்டங்களில் தியேட்டர்கள் மூடல்... காவல்துறை உங்கள் நண்பன் பட ரிலீஸ் தள்ளிவைப்பு

By

சென்னை: காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

சன் மியூஸிக் சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சுரேஷ் ரவி, மோ என்ற படம் மூலம் நடிகர் ஆனார்.

இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள படம், காவல்துறை உங்கள் நண்பன். ரவீனா ரவி நாயகியாக நடித்துள்ளார்.

ரவீனா ரவி

ரவீனா ரவி

டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ரவீனா ரவி, முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். விதார்த்தின் ஒரு கிடாயின் கருணை மனு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்து மலையாளத்தில் நித்ய ஹரிதா நாயகன் என்ற படத்தில் நடித்தார். வசந்த் ரவி நடிக்கும் ராக்கி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்போது, இந்தப் படத்தில் சுரேஷ் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஆதித்யா, சூர்யா

ஆதித்யா, சூர்யா

இந்தப் படத்தில் மைம் கோபி, சூப்பர் குட் சுப்பிரமணி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்ஜே முன்னா இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். படத்தை ஆர்டிஎம் இயக்கி உள்ளார். பிஆர் கார்ப்ரேஷன்ஸ் அன்ட் வொய்ட் மூன் டாக்கிஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசைப்பள்ளியில் பயின்ற ஆதித்யா, சூர்யா ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை ரிலீஸ்

வெள்ளிக்கிழமை ரிலீஸ்

இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் உள்ள சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களுக்கும் கூட்டம் வரவில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைந்து இருப்பதால், தியேட்டர் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இந்நிலையில், காவல் துறை உங்கள் நண்பன் படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதாக, படத்தை வெளியிடும் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். ஒரு சில மாவட்டங்களில் தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதால், படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தியேட்டர்கள் திறந்ததும் புதிய ரிலீஸ் தேதியுடன் சந்திக்கிறோம் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X