வில்லனா நடிச்சிட்டு இருந்தேன்... என்னைய ஹீரோயினா மாத்திடுச்சே இந்த 'காட்டேரி'!

வில்லன் நடிகர் ரவி மரியா காட்டேரி படத்தில் பெண்ணாக நடிக்கிறார்

சென்னை: காட்டேரி படத்தில் தானும் ஒரு ஹீரோயினாக நடிப்பதாக வில்லன் நடிகர் ரவி மரியா தெரிவித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் டீகே இயக்கியுள்ள படம் காட்டேரி. வைபவ், சோனம் பஜ்வா, ரவி மரியா, பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் படத்தில் நடித்த கெட்டப்பிலேயே வந்திருந்தனர்.

பெண் கதாபாத்திரம்:

பெண் கதாபாத்திரம்:

அப்போது பேசிய நடிகர் ரவி மரியா, இந்தப் படத்தில் தான் பெண்ணாக நடித்துள்ளதாகக் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது ," இந்த கெட்டப்பில் என்னை பார்த்தால் நிச்சயமாக சிரிப்பு வரும்.

ஒரு லட்சம் பரிசு:

ஒரு லட்சம் பரிசு:

இயக்குனர் டீகே இந்த படத்திற்கு சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கவே முடியாது. இதை நான் சவாலாகவே சொல்கிறேன். ஒருவேளை உங்களால் யூகிக்க முடிந்தால் நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன்.

காட்டேரியின் வேலை:

காட்டேரியின் வேலை:

காட்டேரி படத்தில் நான் தான் மூன்றாவது ஹீரோயின். சோனம் பஜ்வா என்னுடன் போட்டிபோட்டு நடித்தார். இந்த காட்டேரி என்னை பெண்ணாக மாற்றிவிட்டது. சொல்லப்போனால் அரை ரம்பாவாகவே என்னை மாற்றிவிட்டார்கள்.

வைபவ்:

வைபவ்:

ஆனால் ஹீரோ வைபவும், கருணாகரனும் ஹீரோயினுடன் என்னை நெருங்கவே விடவில்லை. நான் பேச போகும்போதெல்லாம் ஏதாவது காரணம் கூறி என்னை அனுப்பிக்கொண்டே இருந்தனர். இந்த பாவம் அவர்களை சும்மாவிடாது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X