கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள= சித்தார்த்-வேதிகா

By Mayura Akilan

இதோ வந்துவிடும்... அதோ வந்து விடும் என்று ரசிகர்களை காக்க வைத்த காவியத்தலைவன் திரைப்படம் ஒருவழியாக நவம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

வெயில், அங்காடித்தெரு, அரவான் போன்ற திரைப்படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கிய அடுத்த திரைப்படம் 'காவியத்தலைவன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இசைக்கு முக்கியத்துவம்

இசைக்கு முக்கியத்துவம்

காவியத்தலைவன் ஒரு சாதாரண கமர்ஷியல் படம் கிடையாது. நீண்ட நாட்களுக்கு பிறகு இசைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம். இப்படம் நாடகம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கதையோடு, பாடல்களும் சேர்ந்து பயணிக்கும். இதற்காக ஏ.ஆர்.ரகுமானும், நானும் இரண்டு வருடங்களாக ஒன்றாக பயணித்திருக்கிறோம் என்றார் இயக்குநர் வசந்தபாலன்.

கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள்

கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள்

நாடக நடிகர்களான கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோருக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். சித்தார்த்-வேதிகாவின் கதாபாத்திரங்களில் அவர்களுடைய சாயல் இருந்தாலும், இந்த படம் அவர்களை பற்றிய கதை கிடையாது என்கிறார் வசந்தபாலன்.

பாட்டுக்கு மெட்டு

பாட்டுக்கு மெட்டு

இப்படத்தின் பாடல்களை காரைக்குடி, தென்காசி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் பாடல்கள் முதலில் எழுதப்பட்டு அதன்பிறகே மெட்டமைக்கப்பட்டதாம். இது ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான இசை அனுபவமாக இருக்கும் என்கிறார் வசந்தபாலன்.

14 பாடல்கள்

14 பாடல்கள்

காவியத்தலைவன் மொத்தம் 14 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞர் வாலி எழுதிய அல்லி அர்ஜுனா நாடக பாடலில் மொத்தம் 6 காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த 6 காட்சிகளையும் 6 பாடலாக மாற்றிக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

பா.விஜய் – நா.முத்துக்குமார்

பா.விஜய் – நா.முத்துக்குமார்

அதுமட்டுமில்லாமல் பா.விஜய் மொத்தம் 4 பாடல்கள் எழுதியுள்ளார். வாங்க மக்கா வாங்க பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

பழமையான இசைக்கருவிகள்

பழமையான இசைக்கருவிகள்

கவிதையின் ஓட்டத்தோடு இணைந்த பாடல்கள் என்பதால் இப்படத்திற்கு மிகுந்த சிரத்தையோடு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். பழமையான இசைக்கருவிகளை பயன்படுத்தியே இந்த பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகர் ஹரிச்சரண் இப்படத்தில் 7 பாடல்கள் பாடியுள்ளார். வளரும் இளம்பாடகர் ஒருவர் ஒரு படத்திற்கு தொடர்ந்து 7 பாடல்கள் பாடுவது இதுவே முதல்முறையாம்.

தெரு தெருவாக

தெரு தெருவாக

இப்படத்துக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று ‘ரோடு ஷோ' நடத்தி படத்தை விளம்பரப்படுத்தவுள்ளோம். அந்த காலத்தில் நாடகத்தை பார்க்க மக்களை வரவழைக்க எப்படி தெருத் தெருவாக சென்று தண்டோரா அடித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினார்களோ, அதையே நவீன முறையில் இப்படத்துக்காக செய்யவிருக்கிறோம் என்று கூறினார்.

சித்தார்த் - பிரிதிவிராஜ்

சித்தார்த் - பிரிதிவிராஜ்

சித்தார்த் இந்த திரைப்படத்தில் தலைவன்கோட்டை காளியப்ப பாகவதர் கேரக்டரிலும், இவருடைய போட்டியாளராக நடித்திருக்கும் பிருத்விராஜ் மேலச்சிவில்பேரி கோமதிநாயகம் பிள்ளை கேரக்டரிலும் நடித்துள்ளார்.

கதாநாயகர்களின் போட்டி

கதாநாயகர்களின் போட்டி

ஒரே துறையில் இருக்கும் இரண்டு கலைஞர்களில் ஒருவருக்கு புகழும் பாராட்டும் அதிகம் கிடைத்தால் மற்றொருவருக்கு பொறாமை ஏற்படுவது இயல்புதான். இந்த பொறாமை குணத்தை பிரிதிவிராஜ் கதாபாத்திரத்தில் பிரதிபலித்துள்ளார் வசந்தபாலன்.

வேதிகாவின் காதல்

வேதிகாவின் காதல்

நாடகத்தில் நடித்தாலும் நடிப்புக்கு மட்டுமின்றி நிஜமாகவே சித்தார்த் மீது காதல் வயப்படுகிறார் வேதிகா.

சிங்கம்புலி – தம்பி ராமையா

சிங்கம்புலி – தம்பி ராமையா

நாடக கலைஞர்களாக சிங்கம்புலி, தம்பி ராமையாவின் கதாபாத்திரங்கள் நகைச்சுவைக்காக இணைக்கப்படவில்லை. கதையோடு ஒன்றிய கதாபாத்திரங்கள் என்று கூறியுள்ளார் இயக்குநர். காவியத்தலைவன் நவம்பர் 28 தேதியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டுள்ள இந்த நாடகத்தலைவனை ( காவியத்தலைவன்) இன்றைய ரசிகர்களுக்கு பிடிக்கவேண்டுமே? இன்னும் ஒருவாரத்திற்கு காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X