இந்தியாவின் ஆஸ்கர் கனவை நிறைவேற்றுவாரா நிவின் பாலி?
சென்னை : நிவின் பாலி நடித்த காயன்குளம் கொச்சுன்னி திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருது தான், உலகளவில் சினிமா துறைக்கான உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிலும் இந்தியாவில் நம் தேசிய விருதை விட ஆஸ்கர் விருதை தான் திரையுலகினர் கொண்டாடி மகிழ்வர்.
இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் ஆஸ்கர் விருது வென்றதற்கு பிறகு இதன் மவுசு இன்னும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். ஆனாலும், முழு நீளத் திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவில் இருந்து இதுவரை ஒரு படமும் ஆஸ்கர் விருது பெறவில்லை என்ற குறை இன்னமும் திரையுலகினர் மத்தியில் உள்ளது.

காயன்குளம் கொச்சுன்னி:
இந்நிலையில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த காயன்குளம் கொச்சுன்னி திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவான இப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரயூஸ் இயக்கியிருந்தார்.

வசூல் சாதனை”
இப்படம் "காயன்குளம் கொச்சுன்னி" மலையாள திரை உலகில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்த படம். தற்போது இந்த படம் சர்வதேச ரசிகர்களையும் சென்று அடைய உள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இறுதிப்பட்டியல்:
91 ஆவது அகாடமி விருது ஆகிய இந்த வருடத்தில் வெகு சில தென்னிந்திய படங்களே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி 22 ஆம் தேதி விருதுக்கு தேர்வான படங்கள் பற்றிய இறுதி பட்டியல் வெளிவர உள்ளது. வெற்றி பெற்றவருக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும்.

வில்லேஜ் ராக்கர்ஸ்
இதற்கு முன்னர் மதர் இந்தியா, சலாம் பாம்பே மற்றும் லகான் ஆகிய படங்கள் மட்டுமே டாப் 5 வரை சென்றன. இம்முறை இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட தி வில்லேஜ் ராக்கர்ஸ் படம் இறுதி 9 படங்கள் கொண்ட பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











