சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!

சென்னை: சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, நாசர் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள திரைப்படம் கபடதாரி.

இந்த படத்தை பிர­தீப் கிருஷ்­ண­மூர்த்தி இயக்கியுள்ளார். சைமன் இசையமைத்துள்ளார், தனஞ்ஜெயன் தயாரித்துள்ளார்.

சிபிராஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படமானது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆர்வத்துடன் ரசிகர்கள்

ஆர்வத்துடன் ரசிகர்கள்

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தொடக்கத்தில் இருந்து நடித்து வந்தாலும் பேசும் படியாக பெரிதாக நடிப்பில் சோபிக்கவில்லை. இதுவரையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி கொண்டிருக்கிறார். அவருக்கான ஒரு திருப்பம் கபடதாரி படத்தில் அமையும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

நம்பிக்கை அளிக்கிறார்

நம்பிக்கை அளிக்கிறார்

இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இதற்கு முன் விஜய் ஆண்டனி நடிப்பில் சைத்தான், சிபிராஜ் நடிப்பில் சத்யா படங்களை இயக்கி உள்ளார். இரண்டு படங்களுமே த்ரில்லர் கதைகளத்தை கொண்டு வெற்றி பெற்ற படம். அதேபோல் கபடதாரி படமும் வெற்றி படமாக அமையும் என ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கிறார் பிரதீப்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

கவலுதாரி எனும் கன்னட படத்தின் ரீமேக் தான் கபடதாரி. கன்னட சினிமாவில் பெரிய வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் கவலுதாரி, தமிழில் மறு ஆக்கம் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து இன்று வரை பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

நாளை வெளியீடு

நாளை வெளியீடு

நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள கபடதாரி படத்தின் ஸ்னீக் பீக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. மிரட்டலான பின்னணி இசையுடன் படத்தின் முன்னோட்டம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் மெருகேற்றி உள்ளது

பழைய கொலை வழக்கு

பழைய கொலை வழக்கு

இப்படத்தில் காவல்துறை அதிகாரி வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ளார். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு நடக்கும் ஒரு கொலை குறித்த வழக்கை சிபிராஜ் விசாரிக்க, பத்திரிக்கையாளரான ஜெயப்பிரகாஷும் அதுகுறித்த தகவல்களை ஆராய்கிறார். மிரட்டும் பின்னணி இசையுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கபடதாரி படக்குழு பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X