திரையுலக மார்கண்டேயனால் துவக்கி வைக்கப்பட்ட "கபடதாரி" படப்பிடிப்பு
சென்னை : சிபி சத்யராஜ் நடிக்கும் கபடதாரி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று காலை முறையான சடங்கு மற்றும் பூஜையுடன் தொடங்கப்பட்டது. நடிகர் நடிகையர் மற்றும் படக்குழுவினர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சியை திரையுலக மார்க்கண்டேயன் நடிகர் சிவகுமார் கிளிப் அடித்து துவங்கி வைத்தார்.
திரைப்பட இயக்குனர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகாரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் 'வால்டர்' புகழ் இயக்குனர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் மாதம் தெலுங்கில் கவுலதாரி என்ற பெயரில் வெளியான திரைப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தமிழில் ரீமேக் செய்கிறார். இப்படத்தில் சிபி சத்தியராஜ் மற்றும் நந்திதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் லலிதா தனஞ்சயன் தயாரிக்கும் இப்படத்தில் நந்திதா, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
முழுவீச்சில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று மார்ச் 2020 இப்படம் உலகளவில் வெளியிடப்படும் என்று திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்த கவுலதாரி தமிழிலும் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.


Click it and Unblock the Notifications











