»   »  பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!

பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான சில்வர் ஜூப்ளி அல்லது 200 நாள் படம் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.... ம்ஹூம்.. சட்டென்று நினைவுக்கு வராது.

காரணம் அப்படி எந்தப் படமும் ஓடவில்லை. 2007-ம் ஆண்டு வெளியான ரஜினியின் சிவாஜி படம் 200 நாளைத் தொட்டது. அதன் பிறகு வெளியான அவரது படம் எந்திரன் 175 நாட்கள் ஓடியது. பின்னர் வெளியான கோச்சடையான், லிங்கா போன்றவை 100 நாட்களைத் தொடத் தவறி.


Kabalai reaches 200th day

இப்போது ரஜினியின் பிரமாண்ட வெற்றிப் படமான கபாலி 175 நாட்களைக் கடந்து 200 வது நாளைத் தொடவிருக்கிறது. கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியானது இந்தப் படம்.


மதுரை மணி இம்பாலா திரையரங்கில் கபாலி இன்னும் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டிக்கிறது. இப்போதும் 50 சதவீத பார்வையாளர்கள், வார இறுதியில் 80 சதவீதத ரசிகர்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது கபாலி.


ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று தலைவர் படத்தின் இந்த சாதனையை இனிப்புகள் வழங்கி மணி இம்பாலா தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

English summary
Rajini's Kabali movie is nearing its 200th day this week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil