»   »  கபாலி: சொல்பேச்சு கேட்கும் அட்டக் கத்தி தினேஷ்.. திருந்தாத தீயவனாக மெட்ராஸ் கலையரசன்

கபாலி: சொல்பேச்சு கேட்கும் அட்டக் கத்தி தினேஷ்.. திருந்தாத தீயவனாக மெட்ராஸ் கலையரசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி தாதாவாக நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் 17 ம் தேதியன்று சென்னையில் தொடங்க விருக்கிறது.

சென்னை ஏர்போர்ட்டில் இருந்து படத்தை எடுக்க ரஞ்சித் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன, இந்நிலையில் கதைப்படி ரஜினியின் மகன்களாக அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் கலையரசன் இருவரும் நடிக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.


கதைப்படி தன்ஷிகா மகளாக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மகன்களாக தினேஷும், கலையரசனும் நடிக்க விருக்கின்றனராம்.


படத்தில் இருவரும் எந்த மாதிரியான பாத்திரங்களில் வருகிறார்கள் என்று பார்க்கலாம்.


கபாலி

கபாலி

படத்தின் பேச்சு வார்த்தை ஆரம்பித்த போதே அட்டக்கத்தி தினேஷ் படத்தில் நடிப்பது உறுதியானது, மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருந்து கடைசியில் அவர் நடிப்பதை உறுதி செய்தார் ரஞ்சித்.


மெட்ராஸ் கலையரசன்

மெட்ராஸ் கலையரசன்

தொடர்ந்து படம் இறுதி செய்யப்பட்டதும் மெட்ராஸ் கலையரசனும் படத்தின் உள்ளே நுழைந்தார், தினேஷ் மற்றும் கலையரசன் இருவரும் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்கிறார்கள் என்பது குறித்து ரஞ்சித் எதுவும் தெரிவிக்கவில்லை.


மகன்களாக

மகன்களாக

தற்போது தினேஷ் மற்றும் கலையரசன் இருவரின் கதாபாத்திரம் பற்றி தெரிய வந்ததுள்ளது. படத்தில் இருவரும் ரஜினியின் மகன்களாக நடிக்கவிருக்கின்றனராம்.


நல்ல மகனாக தினேஷ்

நல்ல மகனாக தினேஷ்

கதைப்படி அட்டகத்தி தினேஷ் நல்லபழக்கங்களைக் கொண்டவராக இருப்பாராம். அவரால் அவருடைய அப்பாவுக்கு(ரஜினி) நல்லபெயர் கிடைக்குமாம்.


மோசமான மகனாக கலையரசன்

மோசமான மகனாக கலையரசன்

இன்னொரு மகனான கலையரசன், மிகவும் மோசமான மகனாக இருப்பாராம்.மது, புகை உட்பட எல்லாக்கெட்டபழக்கங்களும் உள்ளவராக இருப்பாராம். இவரால் அப்பாவுக்கு எல்லா இடங்களிலும் கெட்டபெயர் ஏற்படுமாம். இந்த மகனை நினைத்து ரஜினி மிகவும் வருத்தப்படுவார் என்றும் சொல்கிறார்கள். படத்தின் கதையில் இந்தப்பாத்திரப்படைப்புகளுக்கு முக்கிய இடம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


2 மகன் 1 மகள்

2 மகன் 1 மகள்

ரஜினிக்கு 2 மகன்கள், ஒரே மகள் என்று செல்லும் இந்தக் கதையில் தினேஷ் மற்றும் கலையரசனின் அன்புத் தங்கையாக தன்ஷிகா நடிக்கவிருக்கிறார்.


நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று ரஜினி ஆடிப் பாடுவாரோ...English summary
Kabali: Attakathi Dinesh and Madras Kalaiarasan both are Acting Rajini's Sons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil