»   »  ரஜினியுடன் இயக்குநர் ரஞ்சித் குடும்பத்தினர் சந்திப்பு!

ரஜினியுடன் இயக்குநர் ரஞ்சித் குடும்பத்தினர் சந்திப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் இயக்குநர் பா ரஞ்சித்தின் குடும்பத்தினர் இன்று படத்தின் நாயகன் ரஜினிகாந்தைச் சந்தித்தனர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் கபாலி. படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.


Kabali director's family meets Rajinikanth

இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவடையும் எனத் தெரிகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடைத்தை அறிந்து, அங்கு சென்று ரஜினியைச் சந்தித்து வருகின்றனர் ஏராளமான ரசிகர்கள்.


Kabali director's family meets Rajinikanth

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் ரஞ்சித்தின் குடும்பத்தினருக்கு ரஜினியைச் சந்தித்து படமெடுத்துக் கொள்ள வேண்டும் என நீண்ட நாளாகக் கேட்டு வந்தனராம். இத்தகவலை அறிந்த ரஜினி அவர்களை இன்று படப்பிடிப்பு தளத்துக்கு வரச் சொன்னார். அனைவருடனும் படமெடுத்துக் கொண்டு, நலம் விசாரித்து அனுப்பி வைத்தார்.


Kabali director's family meets Rajinikanth

ரஜினி ஒரே நேரத்தில் ஷங்கரின் 2.ஓ படப்பிடிப்பிலும், கபாலி படப்பிடிப்பிலும் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth has met Kabali director Pa Ranjith's family members today and taken pictures with them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil