»   »  விதவிதமாக கபாலியை உருவாக்கி மகிழும் ரசிகர்கள்

விதவிதமாக கபாலியை உருவாக்கி மகிழும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்திருக்கும் கபாலி படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

ரஞ்சித்தின் முதல் 2 படங்களில் நடித்த அட்டகத்தி தினேஷ், கலையரசன் இவர்களுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா போன்றோரும் இணைந்து நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் கபாலியின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.


கபாலி படத்தில் வயதான தாதாவாக ரஜினி நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில், கபாலி படத்தில் ரஜினியின் வேடம் எப்படி இருக்கும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் ரஜினியின் ரசிகர்கள் கபாலி படத்தில் ரஜினியின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்று தங்கள் கைவண்ணத்தைக் காட்டி ஒரு சில புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.


அவற்றில் இருந்து ஒரு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.....


பாட்ஷா

பாட்ஷா

இந்தப் புகைப்படத்தில் பாட்ஷாவை நினைவுபடுத்துவது போன்ற தோற்றத்தில் ரஜினி நாற்காலியில் அமர்ந்திருக்க பின்னணியில் பாரதியார் புகைப்படமும் இரட்டைக் கோபுரங்களும் தெரிகின்றன.


கம்பீரமான தாதா

கம்பீரமான தாதா

இந்த புகைப்படத்தில் கண்களில் கூலிங்கிளாஸுடன் தலை மற்றும் தாடி முழுவதும் நரைத்திருக்க கோட் சூட் அணிந்து, மிகவும் கம்பீரமாகத் தோன்றுகிறார் ரஜினி.


இளமையான கபாலி

இளமையான கபாலி

இந்த புகைபடத்தில் மிகவும் இளமையான தோற்றத்துடன் தலை கொள்ளாத முடி மற்றும் தாடியோடு , கண்களில் கோபம் தெறிக்க ரஜினி நின்று கொண்டிருக்கிறார்.


ஸ்டைலான கபாலி

ஸ்டைலான கபாலி

இந்த புகைப்படத்தில் கண்களில் கருப்பு கூலிங்கிளாஸ் கையில் புகையும் சுருட்டு மற்றும் கையில் ஒரு மதுக் கோப்பையுடன் ஸ்டைலாக நின்று கொண்டிருக்கிறார் ரஜினி.


ரத்தம் தெறிக்க வரும் கபாலி

ரத்தம் தெறிக்க வரும் கபாலி

இந்த புகைப்படத்தில் ஒரு பக்கம் கோயில் மறுபக்கம் மலேசியா கோபுரங்கள் பின்னணியில் ரத்தம் தெறிக்க தலைமுடி, தாடி மற்றும் உடை என அனைத்தும் வெள்ளையில் ஜொலிக்க வழக்கமான அவர் ஸ்டைலுடன் நின்று கொண்டிருக்கிறார் ரஜினி.


சீக்கிரம் கபாலிய வெளிய விடுங்கப்பா....English summary
Kabali Movie - Fans Made Some Images.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil