twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கபாலியைத் தராத கடுப்பு... விநியோகஸ்தர்களைத் தூண்டிவிடுகிறாரா திருப்பூர் சுப்ரமணியன்?

    By Shankar
    |

    ரஜினியின் கபாலி படம் வெளியான நாளிலிருந்து முதல் பத்து நாட்கள் தாறுமாறான விலைக்கு விற்கப்பட்டன டிக்கெட்டுகள். விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் ஏகத்துக்கும் அள்ளினார்கள் வசூலை.

    'ஆஹா.. இதான்யா படம்... வசூல் குவிஞ்சிருச்சி... 300 கோடியைத் தாண்டியது.... 500 கோடி தாண்டியது' என சமூக வலைத் தளங்களில் பதிவும் செய்தார்கள் பல தியேட்டர்காரர்கள். குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உரிமையாளர், படம் வெளியாகி நான்கு நாட்கள் தாண்டிய பிறகும் நெடுஞ்சாலை வரி க்யூவில் ரசிகர்கள் காத்திருக்கும் அதிசயம் கபாலிக்குதான் நடந்தது... தலைவர் தலைவர்தான் என்றெல்லாம் ட்வீட்டினார்.

    Kabali issue: New alegations on Tiruppur Subramanyan

    படம் வெளியாகி 7 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்துவிட்டனர் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்கள். இதே குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் ஓனர் ஜனவரி மாதம் போட்ட ட்வீட்டில் கபாலி லாபமில்லை என்றார் கூசாமல். ரசிகர்கள் கடுப்பாக திட்ட ஆரம்பித்ததும் 'சிலருக்கு லாபமில்லையாம்' என்றார்.

    அடுத்து ரஜினி படங்களால் பெரிதாக சம்பாதித்து செட்டிலான திருப்பூர் சுப்பிரமணியம், நீண்ட ஆடியோ பதிவு வெளியிட்டு, அதில் ஏழெட்டுப் பெரிய படங்களை நஷ்டம் என்று கூறி, அதில் கபாலியையும் சேர்த்திருந்தார்.

    உடனவே மதுரை மற்றும் தென்னாற்காடு விநியோகஸ்தர்கள், மணிவர்மா மற்றும் செல்வகுமார் காட்டமாக ஒரு மறுப்பு தெரிவித்தனர். கபாலியால் பெரிய லாபம் கிடைத்தது, ஏன் ரஜினியையும் தாணுவையும் வம்புக்கு இழுக்கிறீர்கள் என்று கேட்க, 'அப்படியா... உங்களுக்கு லாபம் கிடைத்திருந்தால் மகிழ்ச்சிதான்...' என்று ஜகா வாங்கினார் திருப்பூரார்.

    இப்போது, சேலம் விநியோகஸ்தர் 'கபாலி நஷ்டம்' என ஆரம்பித்துள்ளார். இத்தனை நாள் எங்கே போயிருந்தால் இந்த விநியோகஸ்தர்? இப்படிப்பட்ட நபர்கள், தனிப்பட்ட விரோதம் தூண்டுதல் காரணமாக திரைத் துறையின் அழிவுக்குத் துணை போகின்றனர்? என கொந்தளிக்கின்றனர் திரையுலகில். காரணம், நடக்கிற அரசியல் அப்படி!

    உண்மையில் என்ன நடக்கிறது?

    கபாலி படத்தின் கோவை விநியோக உரிமையைக் கேட்டு வந்தவர் திருப்பூர் சுப்பிரமணியன்.

    லிங்கா பட பஞ்சாயத்தில் அதிகமாக அடிபட்டது இவர் பெயர். லிங்கா பஞ்சாயத்தில் இவர் செய்த உள்ளடி வேலைகள் குறித்து இன்னொரு கட்டுரையே எழுதலாம் எனும் அளவுக்கு ஏகப்பட்ட புகார்கள் இவர் மீது. பப்ளிசிட்டிக்காக, 'லிங்கா நஷ்டத்தின் ஒரு பகுதியை நானே செட்டில் செய்து விடுகிறேன்... ரஜினி சார் மூலம் நிறைய சம்பாதித்தவன் நான்,' என்று வெளியில் கூறிய இவர், பின்னர் ரஜினியிடம் போய், 'உங்களுக்காக நான் இவ்வளவு கட்டியுள்ளேன்...' என்று நின்றாராம். என்ன செய்வதென தெரியாமல் சங்கடப்பட்டிருக்கிறார் ரஜினி.

    கபாலி கோவை ஏரியா உரிமையை இவர் கேட்டது வெறும் ரூ 5 கோடிக்கு. ஆனால் தாணு தரவில்லை. வேறு நபருக்கு அதைவிட இரு மடங்குக்கு விற்றுவிட்டார் தாணு. இதில் மகா கடுப்பு திருப்பூர் சுப்பிரமணியனுக்கு என்கிறார்கள்.

    இந்தக் கசப்பை மனதில் வைத்து, படத்தை தனது அரங்குகளில் முதலில் போட மறுத்தவர், வேறு வழியின்றி திரையிட்டார். அதுவும் ஜூலை 22 காலை வரை உறுதி செய்யாமல் இருந்து, கடைசி நேரத்தில் வெளியிட்டார்.

    முதல் நாளில் இவரது அரங்குகளில் (ஸ்ரீசக்தி காம்ப்ளெக்ஸ்) ரூ 200-க்கு கபாலி டிக்கெட் விற்றிருக்கிறார்கள். ஆனால் அடுத்த நாளிலிருந்து தொடர்ந்து இரண்டு தினங்கள் ஒரு டிக்கெட் விலை ரூ 500 விற்றதாகச் சொல்கிறார் திருப்பூர் பகுதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் ஒருவர்.

    கோவை உரிமை கிடைக்காத கோபம், படத்துக்குக் கிடைத்த ஏக வசூல் இரண்டையும் பார்த்த பிறகுதான், இப்படி புலம்ப ஆரம்பித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன் என்கிறார்கள் பிற விநியோகஸ்தர்கள்.

    கபாலியால் நஷ்டம் என்று முதலில் கூறியவர் திருப்பூர் சுப்பிரமணியன்தான். படத்தை எடுத்து விநியோகித்து லாபம் பார்த்த மூன்றுபேர் இதை மறுத்ததும், பின் வாங்கிய திருப்பூர் சுப்பிரமணியம், இப்போது தனக்கு ஆதரவாக, வேண்டப்பட்ட சிலரை விட்டு நஷ்டப் புகார் வாசிக்க வைப்பதாகவும் கூறுகிறார்கள்.

    "தாணு மீதான தனிப்பட்ட கோபத்தை, கபாலி மற்றும் ரஜினி எதிராகத் திருப்பப் பார்க்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன். அது எடுபடவில்லை என்றதும் தனக்கு வேண்டியவர்களைத் தூண்டிவிடுகிறார். ஃபெடரேஷன் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு, அதில் உறுப்பினராகக் கூட இல்லாத திருப்பூர் சுப்பிரமணியன் ஏகப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். தியேட்டர்காரர்களைக் கையில் வைத்துக் கொண்டு இவர் செய்யும் ப்ளாக்மெயில்கள் கொஞ்சமல்ல... பூரா விநியோகஸ்தரும் கதறுகிறார்கள் என்று இவர் வாட்ஸ்ஆப்பில் சொல்கிறாரே... அப்படி யார் கதறினார்கள்? பொய்யான ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு இவராக ஒரு குற்றச்சாட்டை சொன்னார். அது அம்பலமாகிவிட்டதால், சேலம் விநியோகஸ்தர் மூலம் நஷ்டப் புகார் வாசித்துக் காட்டுகிறார்... அத்தனையும் பொய்," என்கிறார்கள் கபாலியால் லாபம் பார்த்த விநியோகஸ்தர்கள்.

    English summary
    Some of the distributors of Rajini's Kabali have levelled various allegations of Tirupur Subramaniyan, a senior distributor who failed to fetch Kabali Kovai rights.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X