»   »  கபாலிடா: ட்விட்டரில் 'தெறி'க்கும் ரஜினி ஜோக்குகள்

கபாலிடா: ட்விட்டரில் 'தெறி'க்கும் ரஜினி ஜோக்குகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி பட ரிலீஸையொட்டி ட்விட்டரில் ரஜினி ஜோக்குகள் வலம் வருகின்றது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் வரும் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது. பட ரிலீஸையொட்டி பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.

சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளன.

இந்நிலையில் கபாலி பற்றிய ரஜினி ஜோக்குகள் ட்விட்டரை கலக்கிக் கொண்டிருக்கின்றன.

கபாலி

கபாலி படத்திற்காக ஆஸ்கருக்கு ரஜினிகாந்த் விருது வழங்கப்படுகிறது என ரவீந்தர் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

விடுமுறை

பிற நடிகர்கள் தங்கள் படங்களை விடுமுறை நாட்களில் வெளியிடுவார்கள். ஆனால் ரஜினியின் படம் ரிலீஸானால் விடுமுறை தானாக வந்துவிடும் என்கிறார் பிரத்யோத்.

ரஜினி

விடுமுறை என்பதால் என் படங்களை ரம்ஜான் அன்று ரிலீஸ் செய்கிறேன்- சல்மான் என் படங்களை ரிலீஸ் செய்தாலே விடுமுறை தான் - ரஜினி

கபாலிடா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சாஸ்திரிகள் நடந்து சென்றார். அப்போது ஒருவர் அவரை பார்த்து, நீங்கள் எந்த கோவில் மாமா? என கேட்க அவரோ 'கபாலிடா' என்றார்.

English summary
As Kabali is set to hit the screens on july 22nd, Rajinikanth jokes are doing rounds on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil