KABALI: ரஜினியின் விருப்பம்... புதிய கிளைமாக்ஸுடன் ரீ-ரிலீஸ்... கபாலி படத்தை டிங்கரிங் செய்த தாணு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படம் தீபாவளிக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜெயிலருக்கும் முன்பாக ரஜினியின் கபாலி திரைப்படம் ரீ-ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பல எக்ஸ்க்ளூஸிவான தகவல்களை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.

 Kabali: Rajinikanths Kabali film will be re-released with a new climax

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ரீ-ரிலீஸ்:
ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்தடுத்து லால் சலாம், தலைவர் 170 படங்களில் நடிக்கவுள்ளார். இதில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ரஜினியின் கபாலி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் திரைப்படம் கபாலி. 2016ம் ஆண்டு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவானது. கோச்சடையான், லிங்கா படங்களின் தோல்வியால் துவண்டு கிடைந்த ரஜினிக்கு, மாஸ் கம்பேக் கொடுத்தது கபாலி தான்.

அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கியிருந்த பா ரஞ்சித், ரஜினியுடன் இணைந்து ஒரு அட்டகாசமான கேங்ஸ்டர் படத்தை கொடுத்திருந்தார். மலேசியா டான் கேரக்டரில் ரஜினி சால்ட் & பெப்பர் லுக்கில் மிரட்டியிருப்பார். அதேநேரம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் முதலில் ரஜினிக்கு விருப்பம் இல்லையாம். ஆனால், பா ரஞ்சித் கேட்டுக் கொண்டதால் அந்த காட்சியை மாற்ற வேண்டாம் எனக் கூறிவிட்டாராம் ரஜினி.

அதன்படி, கபாலி படத்தின் இறுதிக் காட்சியில் வில்லன்களை வேட்டையாடும் ரஜினி, அதன்பின்னர் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். அப்போது அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவரால் சுடப்படுவதாக படம் முடியும். அதேநேரம் இன்னொரு கிளைமாக்ஸ் காட்சியையும் பா ரஞ்சித் படமாக்கியிருந்தாராம். ஆனால், படத்தில் இடம்பெற்றது ரஜினி சுடப்படும் சீன் தான்.

 Kabali: Rajinikanths Kabali film will be re-released with a new climax

இந்நிலையில், தற்போது ரஜினியின் விருப்பத்துக்காக கபாலி படத்தை ரீ-ரிலீஸ் செய்யவுள்ளாராம் கலைப்புலி எஸ் தாணு. இதற்காக ரஜினி விரும்பிய கிளைமாக்ஸையே இந்த ரீ-ரிலீஸில் வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டு ரஜினி பிறந்தநாளில் அவரது பாபா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதேபோல், தற்போது கபாலியும் ரீ-ரிலீஸாகவுள்ளதாம்.

அதன்படி, ரீ-ரிலீஸாகவுள்ள கபாலி படத்தில் ரஜினி போலீஸில் சரண்டர் ஆவது போல கிளைமாக்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு முன்பே கபாலி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் அது ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X