»   »  இந்திய அளவில் கபாலி வசூல் எவ்வளவு... அதுவும் இந்தி ஏரியாக்களில்?

இந்திய அளவில் கபாலி வசூல் எவ்வளவு... அதுவும் இந்தி ஏரியாக்களில்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வட இந்தியாவில் கபாலி திரைப்படம் முதல் வார இறுதியில் ரூ 40 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்தி பேசும் பகுதியில் ஒரு தென்னிந்தியப் படம் இந்த அளவு வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

Kabali's box office record in Hindi belt

ரஜினியின் கபாலி வெளியானதிலிருந்து பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அங்கு சுல்தானை விட அதிக வசூலைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் 18 கோடியைக் குவித்த கபாலி, வாரத்தின் 5 சாதாரண தினங்களில் மேலும் 22 கோடியைக் குவித்துள்ளது.

இந்திய அளவில் 23 நாட்களில் சுல்தான் படம் ரூ 253 கோடியை வசூலித்துள்ளது. ஆனால் வெறும் ஏழு நாட்களில் கபாலி ரூ 175 கோடியைக் குவித்துள்ளது. வரும் வார இறுதியில் சுல்தான் வசூலை கபாலி கடந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகம், கேரளம், ஆந்திரா மற்றும் வட இந்தியப் பகுதிகளில் கபாலி வசூல் ஸ்டெடியாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு வசூலில் அசைக்க முடியாத இடத்தில் உள்ளது கபாலி. இங்கு 23 நாட்களில் சுல்தானுக்குக் கிடைத்த ரூ 150 கோடி வசூலை, வெறும் 6 நாட்களில் முறியடித்துள்ளது கபாலி. இதுவரை கபாலிக்குக் கிடைத்த வெளிநாட்டு வசூல் ரூ 160 கோடி.

English summary
Rajinikanth's Kabali has raked Rs 43 cr at the end of the first week which is considered as the record numbers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil