»   »  வெளியீட்டுக்கு முன்பே ரூ 200 கோடி பிஸினஸ்... தொடரும் கபாலியின் சாதனைகள்!

வெளியீட்டுக்கு முன்பே ரூ 200 கோடி பிஸினஸ்... தொடரும் கபாலியின் சாதனைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் வெளியாகும் முன்பே ரூ 200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதை ஆச்சர்யத்தோடு பார்க்கிறது இந்திய சினிமா.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள புதிய படம் கபாலி, பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது.


Rajinikanth's Kabali movie has done a record Rs 200 cr pre release business

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமைகள் பெரும் தொகைக்கு கைமாறியுள்ளன. அமெரிக்கா உரிமை ரூ 8.5 கோடிக்கு விற்பனையானதை முன்பே தெரிவித்திருந்தோம்.


மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரமாண்டமாக வெளியாகிறது கபாலி. தமிழ்நாட்டுக்கு இணையாக இங்கெல்லாம் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ஜப்பானிலும் கபாலி ஒரே நேரத்தில் வெளியாகிறது.


இலங்கையில் இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் வெளியாகாத அளவுக்கு கிட்டத்தட்ட 50 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.


தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென்னிந்திய பகுதிகளில் மட்டும் ரூ 200 கோடி வரை இந்தப் படம் வியாபாரமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


இதுதவிர வட இந்தியாவில் இந்தப் படத்தை வெளியிட பெரும் தொகைக்கு விலை பேசி வருகிறார்கள்.


வெளியீட்டுக்கு முன்பே ஒரு படம் ரூ 200 கோடியைத் தாண்டி வர்த்தகமாகியிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்பதால் திரையுலகினர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.


சீனா - ஹாங்காங் நாடுகளில் இதுவரை எந்த இந்தியப் படமும் இந்தியாவில் வெளியாகும் போதே வெளியானதில்லை. இந்தக் குறையைப் போக்கும் முதல் படமாக வருகிறது கபாலி.

English summary
Rajinikanth's Kabali movie has done a record Rs 200 cr pre release business
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil